Sunday, 1 March 2015

அவர் இல்லனா நான் இல்ல...கமல் உருக்கம்..


கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ’உத்தம வில்லன்’. கமலின் நண்பரான ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ள இப்படத்தில் மறைந்த இயக்குநர் கே.பாலசந்தரும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தில் கமல், ‘உத்தமன்’ என்ற 8ஆம் நூற்றாண்டு கூத்துக் கலைஞன் கதாபாத்திரத்திலும், மனோரஞ்சன் என்ற 21ஆம் நூற்றாண்டின் சினிமா உச்ச நட்சத்திர கதாபாத்திரத்திலும் நாடித்துள்ளார்.
ஈராஸ் நிறுவனம் வெளியிட இருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் கமல் ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதி, நாசர், படத்தின் இயக்குநர் ரமேஷ் அரவிந்த், இசையமைப்பாளர் ஜிப்ரான், தயாரிப்பாளர் லிங்குசாமி உள்ளிட்ட படக்குழுவினர், ஏராளமான திரையுல பிரபலங்கள் கலந்துக் கொண்டனர்.
இவ்விழாவை இயக்குநரும் நடிகருமான பார்த்திபன் தொகுத்து வழங்கினார். படத்தின் பாடல்களை கமல்ஹாசன் பதிவிறக்கம் செய்யும் இணையதளத்தை வெளியிட, மும்பையில் இருக்கும் கமலின் மகள் ஸ்ருதிஹாசன் பேஸ்டைம் தொழில்நுட்பம் மூலம் பெற்றுக் கொண்டார்.
இசை வெளியீட்டு விழா தொடக்கத்தில் மறைந்த இயக்குநர் பாலசந்தர் கமலுக்கு எழுதிய கடிதம் ஒலி வடிவில் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கமல் மேடையில் தோன்றி உருக்கமாக பேசினார்.
அவர் பேசியதாவது, இந்த இசை நிகழ்ச்சிக்காக நிறைய ஒத்திகை பார்த்து வந்தேன். இப்போது பாலசந்தர் சார் பேசிய வார்த்தைகள் என்னை உணர்ச்சிவசப்பட வைத்திருக்கிறது. நான் ஒத்திகை பார்த்த அனைத்தையும் என்னால் பேச முடியுமா என்று தெரியவில்லை. எனக்கு அவருக்குமான உறவு 40 ஆண்டுகளைக் கடந்த உறவு. பாலசந்தர் சாரைப் பற்றி தாமதமான நினைவுக் கூறல் என்றாலும் அவரது இறப்புக்கு பிறகு பல மேடைகளில் பேசியிருக்கிறேன்.
என்னைப் போல நிறையப் பேருக்கு பாலசந்தர் அவர்கள் அடையாளமாக இருந்திருக்கிறார். எனக்கு அவர் குரு அல்ல, மகா குரு. 'உத்தம வில்லன்' படத்தில் நீங்கள் நடிக்க வேண்டும் என்று கேட்ட போது, மறுப்பு ஏதும் சொல்லாமல் நடிக்க வந்தததுக்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இது போன்ற ஒரு மேடையில் அவர் இருக்க மாட்டார் என்ற விஷயம் எனக்குத் தெரியாது. அதனால், பல தகவல்களை சேகரிக்காமல் விட்டு விட்டேன்.
பார்த்திபன் பேசும் போது சொன்னார், கே.பி.சாரின் பாதிதான் கமல் என்று. அந்த வார்த்தையை நான் ஏற்றுக் கொள்கிறேன். கர்வமாக இல்லாமல் உரிமையோடு, கடமையோடு ஏற்றுக் கொள்கிறேன். அந்த உரிமையையும், கடமையையும் அங்கீகரிக்கும் விதத்தில் அவரின் நிழலாக இருந்து அவரின் பணிகளைத் தொடர்வேன். ரஜினியும், கமலும் பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் என்று கூறுகிறார்கள்.
ரஜினி கூட 'முரட்டுக்காளை' மாதிரியான படங்களில் நடித்து நடிகனாக வளர்ந்திருப்பார். ஆனால், பாலசந்தர் சார் மட்டும் இல்லை என்றால் இப்போது இருக்கிற கமல் வேறு ஒரு கமலாக மட்டுமே இருந்திருப்பேன். இனிமேல் நான் வாழும் வாழ்க்கையில் அவரை மறவாமல் வாழ்வதே என்னுடைய முக்கியமான பணி" என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

அஜித்துக்கு பிறந்த குட்டித் தல…!! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!


நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதை தல ரசிகர்கள் பெரும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
ஷாலினி அஜித் இன்று காலை 4:30 மணி அளவில் சென்னை தனியார் மருத்துவமனையில், ஆண் குழந்தையை பிரசவித்துள்ளார். தாயும், சேயும், நலமாக இருப்பதாகவும், உறவினர்களும், நண்பர்களும் குழந்தையைக் காண வந்து செல்வதாகவும், செய்தியாளர் பல்லவி இன்று காலையே படத்துடன் தன் டுவிட்டர் மூலம் வெளியிட்டார்.
நடிகர் அஜித் மற்றும் ஷலினி, 1999ம் ஆண்டு அமர்க்களம் படப்பின் போது காதலில் விழுந்தனர். இருவரும் 2000மாவது ஆண்டில் மணமுடித்தனர்.
அவர்களுக்கு 2008ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அனௌஷ்கா என்ற இந்த பெண் குழந்தையை அடுத்து சில மாதங்களுக்கு முன் மீண்டும் கர்ப்பமானார்.
தற்போது, நல்லபடியாக ஆண் குழந்தையை பிரசவித்துள்ளார். இந்த செய்தியை கேட்ட அஜித் ரசிகர்கள், தங்களுக்கு குட்டித் தல கிடைத்து விட்டார் என்று வாட்ஸாப் மற்றும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

7000 பேர் கூடி பிரார்த்தனை!! கோலாகலமாக நடந்தது கச்சத்தீவு திருவிழா!!


இந்திய – இலங்கை எல்லையில் அமைந்துள்ள கச்சத்தீவு அந்தோனியார் தேவாலயத் திருவிழா கடந்த 3 தினங்களாகக் கொண்டாடப்பட்டது. இதை அடுத்து நேற்று அங்கு கூடிஇருந்த பக்தர்கள் அனைவரும் அவரவர் தாய்நாடுகளுக்குச் சென்றனர்.
கச்சத் தீவு அந்தோனியர் திருவிழா தமிழக மற்றும் இலங்கை மீனவர்களின் பாரப்பரியம் மிக்க தொரு திருவிழாவாகும். 100 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொண்டாடப்பட்டு வந்த இந்தத் திருவிழா இலங்கை உள்நாட்டுப் போர் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு பின், 2010ம் ஆண்டு மீண்டும் தொடங்கியது.
இந்த ஆண்டிற்கான திருவிழா பிப்ரவரி 28ம் தேதி தொடங்கியது. இலங்கை-இந்தியாவைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இந்த திருவிழாவில் பங்கேற்றனர். கூட்டுப் பிரார்த்தனை, சிலுவைப் பாதை, தேர் திருவிழா என திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
இங்கு பிரார்த்தனை மேற்கொண்ட பக்தர்கள் அமைதி வேண்டி வழிபட்டனர். அதோடு, ஒன்று கூடிய இரு நாட்டுத் தமிழர்களும், ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி நலம் விசாரித்துக் கொண்டனர். திருவிழா முடிந்ததை அடுத்து நேற்று தமிழகத்தில் இருந்து 110 விசைப்படகுகளில் சென்ற, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களும், இலங்கையில் இருந்து வந்திருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களும் அவரவர் நாடுகளுக்குத் திரும்பினர்.
இந்தியாவுக்குச் சொந்தமாக இருந்த கச்சத்தீவு விடுதலைக்குப் பின் 1974ம் ஆண்டு இலங்கையின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இருநாட்டு மீனவர்களுக்கும் இது சொந்தமானது என்பதால், இலங்கை கச்சத்தீவை ஒரு புனித யாத்திகமாக அங்கீகரித்தது.
இலங்கையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தாலும், நாம் அங்கு செல்ல இந்திய பாஸ்போர்ட்டோ, இலங்கை வீசாவோ தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் கச்சத் தீவில் அந்தொணியார் கோயிலைத் தவிற வேறு எந்தக் குடியிருப்பும் இல்லை. அங்கு ஒரு சொட்டுக் கூட குடி நீரும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடு வானில் தோன்றிய தீப்பிழம்பு!! பூமியில் மோதிய விண்கல்!! கேரள மக்கள் பீதி!!


கேரளாவில், வானத்தில் தோன்றிய பெரிய தீப்பிழம்பு, விண்கற்களாக இருக்கலாம் என்று ஆயவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கேரளாவின் எர்ணாகுளம், திருச்சூர், எர்ணாகுளம், பாலக்காடு, கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் வின்னில் தீப்பிழம்பு தென்பட்டது.
வின்னிலிருந்து, பூமியை நோக்கி பெரிய சத்ததுடன் வந்து மோதிய அதை மக்கள் பேரதிர்ச்சியுடன் கண்டனர். அதே சமயம், இது குறித்து, இயற்கை பேரிடர் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
எர்ணாகுளம் மாவட்டம், கரிமலூர் பகுதியில் இந்த தீப்பிழம்பு பூமியில் மோதியுள்ளது. மோதிய இடம் கருகியதோடு, பெரிய பள்ளமும் உருவாகி யுள்ளது. இதனால் மக்களுக்கும் குடியிருப்புகளுக்கும் எந்த வித பாதிப்பும் இல்லை என்ற போதும், மக்களுக்கு இது அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
இதனாலேயே மக்கள் இரவு முழுவதும் விழித்திருந்தனர். இந்நிலையில், விரைந்து வந்த ஆய்வாளர்கள், பூமியில் தீப்பிழம்பு தாக்கியதை ஆய்வு செய்தனர்.
ஆய்வாளர்களில் ஒருவரான சேகர் குரியகோசே அவரது முதற்கட்ட அறிக்கையில், பூமியில் தாக்கப்பட்ட இடத்தில் அதிக புவி ஈர்ப்பு விசை இருப்பதாலும், சிதறிய பாகங்கள் சிறியதாக இருந்த போதும் அதிக எடையுடனும் இருப்பதாலும், இந்த தீப்பிழம்பு ஒரு விண்கல்லாக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இருந்தாலும், இது ஒரு மனதான முடிவே என்றும், ஆய்வுக் கூடத்தில் சேகரித்துள்ள தடயங்களை வைத்து ஆய்வு செய்ததன் பின்னரே உறுதியாகச் சொல்ல முடியும் என்றும் அவர்கள் கூறினர். அதே சமயம் இது விண்வெளியில் இருந்த ராக்கெட் அல்லது செயற்கைக் கோள் பாகங்களாக இருக்கவும் வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

’தனுஷ் என் படத்தை பார்க்கவில்லை’- சிவா!!?


தனுஷின் ’வோன்டர்பார் பிலிம்ஸ்’ தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘காக்கிசட்டை’.
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இப்படத்தில் ஸ்ரீதிவ்யா நடித்துள்ளர். இப்படத்தினை பார்த்து விட்டு தனுஷ் சிவகார்த்திகேயனை, நன்றாக நடித்திருப்பதாக பாராட்டியுள்ளார்.
மேலும் சிவா கூறுகையில், ’தனுஷ் சார் என்னுடைய எதிர்நீச்சல் படத்திற்குப் பிறகு இந்தப் படத்தினை பார்த்து விட்டு பாராட்டினார்.
என்னுடைய வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான்கராத்தே போன்ற படங்கள் வெளியான போது அவர் பாலிவுட் பட ஷூட்டிங் சென்றிருந்தார். அதனால் அதனை அவர் பார்க்க வில்லை.
எனக்கும் அவருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. நீங்களாக எதையாவது கொளுத்தி போடாதீர்கள்.’ என்று கூறியுள்ளார்.

தின பலன் 02-03-2015


தெரிந்து கொள்வோம்!! பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர்!!!
திண்டிவனம் – புதுவை சாலையில் உள்ள திருச்சிற்றம்பலம் பகுதியில் இடம்பெற்றுள்ளது இந்த பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில். இக்கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் சுமார் 36 அடி உயரம் கொண்டவர் ஆவர். இங்கு இவர் ஆஞ்சநேய முகத்துடன், வாராகம், கருடன், ஹயக்ரீவன், நரசிம்மம் ஆகிய முகத்துடன் காட்சியளிக்கின்றார்.
இனி நமது ராசிகளுக்கான இன்றைய பலன்களை பார்க்கலாம்..!!
மேஷம் - நன்மை
ரிஷபம் - அமைதி
மிதுனம் - களிப்பு
கடகம் - சிக்கல்
சிம்மம் - பயம்
கன்னி - பாராட்டு
துலாம் - வெற்றி
விருச்சிகம் - பரிசு
தனுசு - லாபம்
மகரம் - நலம்
கும்பம் - வெற்றி
மீனம் - ஆக்கம்

இன்றைய தினம்....!! (மார்ச் 2)


மார்ச் 2
1930
காந்தியடிகள் உப்புச் சத்தியாகிரகத்துக்காக நடை பயணத்தை துவக்கிய தினம்…!!
இந்தியாவில் ஆங்கிலேயர்கள், இந்தியர்களால் உற்பத்தி செய்யப்படும் உப்பிற்கு வரி விதித்ததை எதிர்த்து காந்திஜி உப்புச் சத்தியாகிரகம் மேற்கொண்டார்.
அஹமதாபாதிலிருந்து தொடங்கிய இப்பயனம் 1930ம் ஆண்டு இதே தினத்தன்று தான் காந்தியடிகளால், ஆரம்பிக்கப்பட்டது. அகமதாபாதிலிருந்து இவருடன், சரோஜினி நாயிடு உள்ளிட்ட சுதந்திர வீரர்களும் பங்கு கொண்டனர். இந்திய விடுதலையில் மிக முக்கிய நடவடிக்கையாக இந்த உப்புச் சத்தியாகிரகம் கருதப்படுகிறது.
அகமதா பாத்திலிருந்து குஜராத் கரையோரம் அமைந்துள்ள தண்டியில் சென்று தடையை மீறி உப்பு எடுப்பது தான் இந்த உப்புச் சத்தியாகிரகம்.
இதைச் செய்ய விடாமல் ஆங்கிலேய அரசு காந்தியை கைது செய்தது. இதனால், நாடு முழுவதும் உப்புச் சத்தியாகிரகத்துக்கு ஆதரவு கூடிக் கொண்டே சென்றது.
ஏப்ரல் 6, 1930 இல் காந்தி தண்டியில் உப்புச் சட்டங்களை உடைத்தபோது, அது பேரளவில் சட்ட மறுப்பு இயக்கமாக இலட்சக்கணக்கான இந்தியர்களை ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகப் போராடத் தூண்டியது.
இன்றைய வரலாற்று நிகழ்வுகள்
1823 - தமிழ் நாடு, ஸ்ரீபெரும்புதூரில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
1935 - விவசாயிகளையும் வயலின் கேட்கச் செய்த குன்னக் குடி வைத்திய நாதன் பிறந்தார்.
1949 - இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு இறந்த தினம்.
1995 - யாஹூ நிறுவனம் தொடங்கப்பட்டது.
1958 - தி.மு.க. மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.
இன்றைய சிறப்பு தினம்
விவசாயிகள் தினம் (பர்மா)
சுதந்திர தினம் (டெக்சாஸ்)
அத்வா வெற்றி நாள் (எத்தியோப்பியா)