இந்திய – இலங்கை எல்லையில் அமைந்துள்ள கச்சத்தீவு அந்தோனியார் தேவாலயத் திருவிழா கடந்த 3 தினங்களாகக் கொண்டாடப்பட்டது. இதை அடுத்து நேற்று அங்கு கூடிஇருந்த பக்தர்கள் அனைவரும் அவரவர் தாய்நாடுகளுக்குச் சென்றனர்.
கச்சத் தீவு அந்தோனியர் திருவிழா தமிழக மற்றும் இலங்கை மீனவர்களின் பாரப்பரியம் மிக்க தொரு திருவிழாவாகும். 100 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொண்டாடப்பட்டு வந்த இந்தத் திருவிழா இலங்கை உள்நாட்டுப் போர் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு பின், 2010ம் ஆண்டு மீண்டும் தொடங்கியது.
இந்த ஆண்டிற்கான திருவிழா பிப்ரவரி 28ம் தேதி தொடங்கியது. இலங்கை-இந்தியாவைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இந்த திருவிழாவில் பங்கேற்றனர். கூட்டுப் பிரார்த்தனை, சிலுவைப் பாதை, தேர் திருவிழா என திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
இங்கு பிரார்த்தனை மேற்கொண்ட பக்தர்கள் அமைதி வேண்டி வழிபட்டனர். அதோடு, ஒன்று கூடிய இரு நாட்டுத் தமிழர்களும், ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி நலம் விசாரித்துக் கொண்டனர். திருவிழா முடிந்ததை அடுத்து நேற்று தமிழகத்தில் இருந்து 110 விசைப்படகுகளில் சென்ற, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களும், இலங்கையில் இருந்து வந்திருந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களும் அவரவர் நாடுகளுக்குத் திரும்பினர்.
இந்தியாவுக்குச் சொந்தமாக இருந்த கச்சத்தீவு விடுதலைக்குப் பின் 1974ம் ஆண்டு இலங்கையின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. இருநாட்டு மீனவர்களுக்கும் இது சொந்தமானது என்பதால், இலங்கை கச்சத்தீவை ஒரு புனித யாத்திகமாக அங்கீகரித்தது.
இலங்கையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தாலும், நாம் அங்கு செல்ல இந்திய பாஸ்போர்ட்டோ, இலங்கை வீசாவோ தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் கச்சத் தீவில் அந்தொணியார் கோயிலைத் தவிற வேறு எந்தக் குடியிருப்பும் இல்லை. அங்கு ஒரு சொட்டுக் கூட குடி நீரும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment