கேரளாவில், வானத்தில் தோன்றிய பெரிய தீப்பிழம்பு, விண்கற்களாக இருக்கலாம் என்று ஆயவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கேரளாவின் எர்ணாகுளம், திருச்சூர், எர்ணாகுளம், பாலக்காடு, கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய மாவட்டங்களில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் வின்னில் தீப்பிழம்பு தென்பட்டது.
வின்னிலிருந்து, பூமியை நோக்கி பெரிய சத்ததுடன் வந்து மோதிய அதை மக்கள் பேரதிர்ச்சியுடன் கண்டனர். அதே சமயம், இது குறித்து, இயற்கை பேரிடர் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
எர்ணாகுளம் மாவட்டம், கரிமலூர் பகுதியில் இந்த தீப்பிழம்பு பூமியில் மோதியுள்ளது. மோதிய இடம் கருகியதோடு, பெரிய பள்ளமும் உருவாகி யுள்ளது. இதனால் மக்களுக்கும் குடியிருப்புகளுக்கும் எந்த வித பாதிப்பும் இல்லை என்ற போதும், மக்களுக்கு இது அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தது.
இதனாலேயே மக்கள் இரவு முழுவதும் விழித்திருந்தனர். இந்நிலையில், விரைந்து வந்த ஆய்வாளர்கள், பூமியில் தீப்பிழம்பு தாக்கியதை ஆய்வு செய்தனர்.
ஆய்வாளர்களில் ஒருவரான சேகர் குரியகோசே அவரது முதற்கட்ட அறிக்கையில், பூமியில் தாக்கப்பட்ட இடத்தில் அதிக புவி ஈர்ப்பு விசை இருப்பதாலும், சிதறிய பாகங்கள் சிறியதாக இருந்த போதும் அதிக எடையுடனும் இருப்பதாலும், இந்த தீப்பிழம்பு ஒரு விண்கல்லாக இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இருந்தாலும், இது ஒரு மனதான முடிவே என்றும், ஆய்வுக் கூடத்தில் சேகரித்துள்ள தடயங்களை வைத்து ஆய்வு செய்ததன் பின்னரே உறுதியாகச் சொல்ல முடியும் என்றும் அவர்கள் கூறினர். அதே சமயம் இது விண்வெளியில் இருந்த ராக்கெட் அல்லது செயற்கைக் கோள் பாகங்களாக இருக்கவும் வாய்ப்புள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment