Monday, 2 March 2015

மிரளவைக்கும் Windows 10 வசதிகள்…


மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது Windows 10 OS ஐ இந்த வருடம் அறிமுகப்படுத்தப்போவதாக ஏற்கனவே கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
தற்போது தனது Windows 10 இயங்குதளத்தில் அறிமுகப்படுத்த உள்ள வசதிகள் குறித்த உண்மையை வெளியிட்டுள்ளது. இவற்றையெல்லாம் பார்க்கும் போது Windows 10க்குரிய எதிர்பார்ப்பினை எகிர வைக்கும் ஒன்றாக இருக்கின்றது. அப்படி என்னதான் என்று கேட்கின்றீர்களா?? கீழே தொடருங்கள்..
(வீடியோ கீழே)
Windows 10 உங்கள் ஸ்மார்ட்ஃபோன்களில் இன்ஸ்டால் செய்யப்பட்ட பின், இதை கொண்டு அப்ளிகேஷன்களை கணினியுடன் பகிர்ந்து கொள்ள முடியும்.
Windows 10 கணினியில் Cortana வசதியும் உள்ளது. இதன் மூலம் உங்கள் கணினியை உங்கள் வாய்ஸ் மூலம் செயல்பட வைக்கலாம்.
Windows 7 அல்லது Windows 8.1-ல் இருந்து Windows 10-ஐ இலவசமாக அப்டேட் செய்து ஒரு வருடம் வரை பயன்படுத்த முடியும். மேலும், Spartan Browser இதில் அறிமுகப்படுத்தப்படும் என கூறியுள்ளது மைக்ரோசாஃப்ட் நிறுவனம்.
Windows 10-ல் ஸ்டார்ட் Windows 8 மற்றும் பழைய Windows OSகளின் கலவையாக இருக்கும். Windows 10 மூலமும் X-box சேவைகளை பயன்படுத்த முடியும். இதில் மிக முக்கிய அம்சமாக கருதப்படுவது இந்த ஹாலோ லென்ஸ்(Holo Lens) தான்.
மிக ஹாலோகிராபிக் உலகத்தை கண்முன்னே கொண்டு வருகிறது. இந்த ஹாலோ லென்ஸ் தொழில்நுட்பம். இது தொடர்பான வீடியோ கீழே…
(வீடியோ கீழே)

No comments:

Post a Comment