கடந்த சில வருடங்களாக மார்கெட் இழந்து வந்த தமன்னா தற்போதுதான் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து கொண்டிருக்கும் அவர் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக ஒரு இந்தி படத்திலும் நடிப்பதற்கான பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
தமிழில் ஆர்யாவிற்கு ஜோடியாக இயக்குநர் ராஜேஷ் இயக்கிவரும் வாசுவும் சிவாவும் ஒண்ணா படிச்சவங்க என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில்தான் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
இந்நிலையில் பரத் ஹீரோவாக நடிக்கும் ஒரு புதிய படத்தில் தமன்னாவை ஹீரோயினாக நடிக்க வைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால், அவர் நான் தற்போது முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து வருகிறேன், இந்நிலையில் பரத்துடன் நடித்தால் என் மார்க்கெட் என்னாவது? என்று கூறி மறுத்து விட்டாராம்.
இதை அறிந்த பரத் கண்டேன் காதலை நடிக்கும் போது நான் பெரிய ஹீரோ, அதனால், அவர் என்னுடன் நடித்தார், தற்போது எனக்கு மார்க்கெட் இல்லை என்பதால் தான் மறுத்து விட்டார் என கூறி நெருங்கிய வட்டாரங்களில் புலம்பி வருகிறாராம்.

No comments:
Post a Comment