Monday, 2 March 2015

சென்னைக்கு வரும் ஸ்மார்ட் சிட்டி எப்படி இருக்கும்??


சென்னை பொன்னேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி உருவாக்க முடிவெடுத்துள்ளது.
கடந்த வருட பட்ஜெட்டில் இந்தியா முழுவதும் 100 ஸ்மார்ட் சிட்டி அமைக்கும் திட்டத்தினை அறிவித்தது. இதன் மூலம் இந்தியப் பொருளாதாரம் பெருகும் என்பது மத்திய அரசின் கணிப்பு.
சென்னையில் பொன்னேரி பகுதியை சுற்றி உருவாக உள்ள இந்த ஸ்மார்ட் சிட்டியினை உருவாக்க ஜப்பான் நிறுவனங்கள் முன்வந்துள்ளன. ஸ்மார்ட் சிட்டியாக தேர்வு செய்யப்படும் நகரத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, தண்ணீர், மின்சாரம், கழிவுநீர் மேலாண்மை, ஆரோக்கியமான கல்வி, இயற்கை வளங்களை பொறுப்பாக பயன்படுத்துவது, மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவது, நிதிசேவை மையங்கள், வர்த்தக மற்றும் பொருளாதார வளர்ச்சியை உறுதிபடுத்துவது, முதலீடுகளை ஈர்ப்பது போன்ற திட்டங்கள் மேற்கொள்ளப்படும். தற்போது இந்த பகுதிகளை ஆய்வு செய்யும் முதற்கட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது.
ஸ்மார்ட் சிட்டி அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள பகுதியின் வருவாய், சுகாதார நிலை, இயற்கை வளம், மின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வசதி, தொழில் அமைப்பதற்கான சாத்திய கூறுகள், தொழில்நுட்ப வசதிகள் மற்றும் மனித ஆற்றல் போன்றவை, கடன் வழங்கினால் திருப்பி செலுத்தும் தகுதி போன்றவை குறித்து முதலில் ஆய்வு செய்யப்பட உள்ளது.
தற்போது முதல்கட்டமாக இதை அமைப்பதற்கான அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து வருகின்றனர். தொழிற்சாலைகள் மற்றும் கட்டிடங்கள் கட்டுவதற்கான நிலம், நிலத்தடி நீர், மின்சாரத் தேவைகள், போக்குவத்து இணைப்பு, துறைமுக, விமான இணைப்பு மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த விவரங்களை ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை அளிக்கும் பணியில் ஜப்பானைச் சேர்ந்த ஆய்வு கமிட்டி ஒன்று செயல்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment