Monday, 2 March 2015

ஐ படம் 300 கோடியா..? ரொம்ப ஓவரா இருக்கே...!


விக்ரம், எமி ஜாக்ஸன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கடந்த பொங்கல் அன்று வெளிவந்த படம் ’ஐ’. ஆஸ்கர் ரவிச்சந்திரன் பிரமாண்டமாக தயாரித்திருந்த இப்படம் உலகம் முழுவதும் 150 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகின்றது.
இப்படத்தில் விக்ரமின் நடிப்பை பார்த்து பாராட்டாத ரசிகர்களே இல்லை.. ஏன் திரையுலகினர்கள் கூட விக்ரமின் நடிப்பை பார்த்து மிரண்டு விட்டார்கள். படம் குறித்து என்னதான் எதிர்மறை விமர்சனம் எழுந்தாலும் விக்ரம் நடிப்பை ஒரு தடவை தியேட்டரில் பார்த்துவிட வேண்டும் என ரசிகர்கள் எண்ணியதன் காரணமாக, குடும்பம் குடும்பமாக மக்கள் தியேட்டர்களுக்கு படையெடுத்தனர்.
அதோடு ஷங்கரின் பிரம்மாண்டத்தை தியேட்டரில் மட்டுமே பார்க்க வேண்டும் என்று மக்கள் எடுத்த முடிவும் ஐ படத்துக்கு பெரிய வெற்றியைத் தேடிக்கொடுத்துவிட்டது. உலகளவில் முதல்நாளில் மட்டும் ஐ படம் 25 கோடிக்கும் மேல் வசூலித்ததாக சொல்லப்பட்டது.
தற்போது படம் ரிலீஸாகி 50 நாட்களைக் கடந்துள்ள நிலையில் 'ஐ' படம் இதுவரை 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கும் என்கிறார்கள் உண்மை அறிந்தவர்கள். ஆனால் ஐ படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கார் ரவிசந்திரனோ ஐ படம் 300 கோடி வசூலித்திருப்பதாக அள்ளிவிட்டுக் கொண்டிருக்கிறாராம்.

No comments:

Post a Comment