அமெரிக்க வாழ் தமிழர்கள், கடல்கடந்தும் தம் தாய்மொழியை வளர்க்க தம்மால் முடிந்த முயற்சிகள் செய்து வருகின்றனர் என்பதைத் தெரிந்து கொண்டால் மெய்சிலிர்க்கச் செய்கிறது.
கடல் கடந்து சென்றாலும், தம் பிள்ளைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்பதற்காக அமெரிக்க வாழ் தமிழர்கள் அமெரிக்காவில் மொத்தம் தமிழ் பள்ளிகளை நிறுவியுள்ளனர்.
இது தவிற தமிழ் பள்ளியில் பயிலாத குழந்தைகளுக்கு ஒவ்வொரு வாரமும், 2 மணி நேரம் தமிழ் சிறப்பு வகுப்புகளும் நடந்து வருகின்றன. இந்த பள்ளிகள் மற்றும் வகுப்புகளில், தமிழ் தன்னார்வ ஆசிரியர்கள் தமிழ் பயிற்றுவித்து வருகின்றனர்.
இன்று இந்த பள்ளிகள் 100க்கும் மேலாக பெருகியதோடு, அதன் தரமும் உயரந்துள்ளது. அமெரிக்கன் தமிழ் அகடமி, கலிஃபோர்னியா தமிழ் அகடமி என்ற இரு அமைப்புகளின் பாடத் திட்டங்கள் அமெரிக்கா முழுவதும் பரவலாக பின்பற்றப்படுகின்றன.
தற்போது அமெரிக்க தமிழ் பாடத்திட்டங்களின் தரம், தமிழகம், சிங்கபூர் ஆகியவற்றிற்கு நிகராக இருக்கின்றன. இதனால், அமெரிக்காவிலிருந்து தமிழகம் திரும்பும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு, தமிழகப் பள்ளியில் தமிழ்ப் பாடம் தொடர்வது எளிதாகிவிட்டது.
இது தவிற, தமிழ் இலக்கியங்களை தம் பிள்ளைகளுக்கு கற்றுத் தரும் விதமாக, அவ்வப்போது திருக்குறள் போட்டி, செய்யுள் போட்டி, கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி போன்றவற்றை நடத்தி வருகின்றன. அந்த வகையில் 8 வருடங்களுக்கு முன், டல்லாஸ் மாநகரில் ப்ளேனோ தமிழ்ப் பள்ளியில், தொடங்கப்பட்ட ‘ஒரு குரளுக்கு ஒரு டாலர்’ திருக்குறள் போட்டியை ஆரம்பித்தனர்.
குழந்தைகள் மற்றும் பெற்றோரை ஊக்குவிக்கும் விதமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த போட்டி நாளடைவில் உலகத் தமிழர்களின் கவணத்தை ஈர்த்து ள்ளது. வெளி நாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பலர் இந்த முறையை பின்பற்ற ஆரம்பித்து விட்டனர். 8வது ஆண்டாக இந்த ஆண்டு டல்லாஸில் நடைபெற்ற ‘ஒரு குரளுக்கு ஒரு டாலர்’ போட்டியில் அமெரிக்க தமிழர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டு நடந்த போட்டியில் கோப்பல் தமிழ்ப் பள்ளி, கொங்கு தமிழ்ப் பள்ளி, DFW வித்யா விகாஸ் தமிழ்ப்பள்ளி, பாலதத்தா தமிழ்ப் பள்ளி, அவ்வை தமிழ்ப் பள்ளி மற்றும் ப்ளேனோ தமிழ்ப் பள்ளிகளிலிருந்து மொத்தம் 135 குழந்தைகள் கலந்து கொண்டனர். போட்டியில் 11 வயது நந்தினி 333 குறள்களை முழு அர்த்தத்தடன் கூறி முதல் பரிசை வென்றார்.
4 வயது சண்முகவ் 40 குறள்களை ஒப்பித்து மழலைப் பிரிவில் முதல் பரிசு பெற்றார். கோப்பல் தமிழ்ப் பள்ளி, கொங்கு தமிழ்ப் பள்ளி, DFW வித்யா விகாஸ் தமிழ்ப்பள்ளி, பாலதத்தா தமிழ்ப் பள்ளி, அவ்வை தமிழ்ப் பள்ளி மற்றும் ப்ளேனோ தமிழ்ப் பள்ளிகளிலிருந்து மாணவர்கள் பங்கேற்றனர். பெரியவர்களுக்கான போட்டியில் சங்கீதா வெற்றி பெற்றார். இது தவிற அவ்வை அமுதம் என்ற ஆத்த்ச்சூடிக்கான போட்டி, சுயமாக தமிழில் எழுதும் கட்டுரைப் போட்டி முதலியவையும் இங்கு இடம்பெற்றன.

No comments:
Post a Comment