Monday, 2 March 2015

தொடர் தோல்வி.. சாப்பாட்டுக் கடை நடத்தும் நடிகர்..!


தொடர் தோல்விகளால் துவண்டு போய் கிடக்கிறார் இரண்டு எழுத்து பெயர் கொண்ட டிஷ்யூம் நடிகர்.
இவர் ஒரு முன்னணி தயாரிப்பாளரின் வாரிசு தான் என்றாலும் எந்த தயாரிப்பாளரும் அவரை வைத்து படம் இயக்க முன் வரவில்லை. சரி வேற யாரும் தான் வரல, தன் மகனை வைத்து நாம்லே படம் இயக்கலாம் என்று அவருடைய அப்பாவே முன்னாடி வந்தாலும், இவரிடம் கதை சொல்ல வரும் இயக்குநர்கள் எல்லோரும் உங்கள் மகனா என்று ஓடிவிடுகிறார்களாம்.
இதற்கெல்லாம் காரணம் சமீபத்தில் சொல்லிக் கொள்ளும் படி அவருக்கு வெற்றிப் படம் எதுவும் அமையவில்லை என்பதுதான். கடைசியாக வாரிசு நடிகையுடன் ஜோடி சேர்ந்து நடித்து, நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளியான இரண்டெழுத்துப் படமும் எதிர்பார்த்த படி ஓடவில்லை. இதனால் மனம் நொந்து போயுள்ளார் நடிகர். எனவே, மீண்டும் ஒரு வெற்றிப் படம் கொடுத்து சினிமாவில் தன்னைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார் அவர்.
ஆனால் எந்த இயக்குநரும் அவருக்கு வாய்ப்பு தர முன்வரவில்லை. சமீபத்தில் தான் ஒரு இயக்குநர் அவரை வைத்து ஒரு படம் இயக்க முன்வந்தார். ஆனால் அதுவும் நம்பர் நடிகையால் புஸ் ஆகிவிட்டது.
பல வருடங்களுக்கு முன்னர் நம்பர் நடிகையுடன் இவர் நடித்த ஓரெழுத்துப் படம் வெற்றிகரமாக ஓடியது. அதனை மனதில் கொண்டு மீண்டும் நடிகையுடன் ஜோடி சேர முயற்சித்தார். ஆனால், சம்பளத்தை ஓவராகக் கேட்டு நாசுக்காக வாய்ப்பை மறுத்து விட்டார் நம்பர் நடிகை. அந்த இயக்குநரும் இந்தப் படத்தை அப்பறம் பண்ணீக்கலாம் என்று சொல்லிவிட்டாராம்.
இதனால் மனம் வெறுத்துப் போன நடிகர், மீண்டும் பட வாய்ப்பு வரும் வகையில் வீட்டில் சும்மா இருக்க விரும்பவில்லையாம். அதனால், சாப்பாட்டுக் கடை நடத்தி வரும் தனது மனைவிக்கு உதவப் போய் விட்டாராம்.

No comments:

Post a Comment