விண்வெளியில் முதன்முதலாக எடுக்கப்பட்ட செல்ஃபி புகைப்படம் ரூ.60ஆயிரங்களுக்கு ஏலம் சென்றுள்ளது.
49 ஆண்டுகளுக்கு புஷ் அல்டிரின் என்ற விண்வெளிவீரர் எடுத்த செல்ஃபி புகைப்படம் ரூ.60ஆயிரத்திற்கு ஏலத்தில் சென்றுள்ளது.
புஷ் அல்டிரின் 1966ஆம் ஆண்டு ஜெமினி 12 என்ற விண்கலம் மூலம் விண்வெளிக்கு சென்றார். அப்போது அவர் அங்கு எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் லண்டனில் ஏலம் விடப்பட்டது.
சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற இந்த ஏலத்தில் இந்த செல்ஃபி புகைப்படம் நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட 10 மடங்கு அதிக விலைக்கு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
நாசாவால் எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் ஏலம் விடப்பட்டன. அவை மொத்தத்தில் ரூ.5 கோடி மதிப்பில் ஏலம் சென்றது.

No comments:
Post a Comment