வீட்டில் கணினி வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் சந்திக்கும் ஒரே பிரச்சனை என்றால் அது மெதுவாக இயங்கும் தன்மை தான்.
அது டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் என்றாலும் சரி, லேப்டாப் என்றாலும் சரி அனைத்திலும் இதே பிரச்சனை தான்.
சரி இதற்கெல்லாம் என்ன காரணமாக இருக்கும்?? எப்படி சரி செய்யலாம்?? கீழே பார்க்கலாம்…
டெஸ்க்டாப்:
டெஸ்க்டாப், உங்கள் சிஸ்டத்தின் மூளையான OS-ன் நேரடி கண்ட்ரோலில் இருக்கும். அதனால் அதில் நீங்கள் எப்போதும் அதிகமான ஃபைல்களை வைத்திருக்க கூடாது. ஏனெனில் டெஸ்க்டாப்பின் ஃபைல்கள் எப்போதும் C:-ல் சேமிக்கப்படும். இதனால், கணினியின் வேகம் நிச்சயம் பாதிக்கப்படும்.
Recycle Bin:
ரீசைக்கில் பின் ஆனது எப்போதும் காலியாகவே இருக்க வேண்டும். அதில் அதிக ஃபைல்கள் சேர சேர கணினியின் வேகம் குறைந்து கொண்டு தான் போகும்.
சாஃப்ட்வேர்கள்:
நீங்கள் கணினியில் அதிகளவில் பயன்படுத்தாத அல்லது பயன்படுத்தவே பயன்படுத்தாத சாஃப்ட்வேர்களை நீக்கிவிடுங்கள் அதுவும் கணினியின் வேகத்திற்கு தடையாக இருக்கும்.
ரேம்:
பொதுவாக கணினி வாங்கும்போதே உங்கள் ப்ராசசருக்கு தகுந்த ரேம் வாங்க வேண்டும். இல்லையெனில் நிச்சயம் கணினி மிகவும் மெதுவாகவே இருக்கும். கணினியின் வேகத்தை சீராக வைக்க இவ்விரண்டும் சரியான ஜோடியாக இருக்க வேண்டும்.
ஹார்ட்டிஸ்க்:
உங்கள் ஹாட்டிஸ்க் எப்போதும் குறைந்தது 10% காலியாக இருக்க வேண்டும். இல்லையெனில் நிச்சயம் கணினி ஸ்லோவாகவே இருக்கும். எனவே ஹார்ட்டிஸ்க் எப்போதும் 10% காலியாக வைத்துக் கொள்ளுங்கள்.

No comments:
Post a Comment