நடித்த சில படங்களிலேயே இந்த நடிகருக்கு இவ்வளோ ரசிகர்களா என்று, திரையுலகினர் அனைவரும் ஆச்சரியப்படும் அளவிற்கு விறுவிறுவென வளர்ந்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
இதுவரை காமெடி ட்ராக்கில் பயணித்த சிவகார்த்திகேயன் சமீபத்தில் வெளிவந்த காக்கி சட்டை படம் மூலம் ஆகஷன் அவதாரம் எடுத்திருக்கிறார். அவருடைய ஆக்ஷன் அவதாரமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
தற்போது காக்கி சட்டை படம் வெளிவந்து 25 நாட்களை கடந்த நிலையில் அதன் வெற்றியை கொண்டாடும் வகையில் டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார் சிவகார்த்திகேயன்.
அப்போது அவரிடம் விஜய் சேதுபதியை உங்களுக்கு போட்டியாக நினைக்கிறீர்களா? என்று கேட்டதற்கு, எனக்கு போட்டிகளில் நம்பிக்கை இல்லை என்று கூறினார்.
மேலும் விஜய், அஜித் குறித்து கேட்டதற்கு, அஜித்தை சாரை நேரில் சந்தித்து 5 மணி நேரம் பேசினேன். அவரிடம் பேசியதில் இருந்து வாழ்க்கைக்கு தேவையான தன்னம்பிக்கை கிடைத்தது போல் உணர்கிறேன். அதேபோல் விஜய் சாரை பற்றி சொல்லனும்னா அவர் Complete Entertainer.. நல்ல நடிகர்.. டான்ஸர் என்றார் சிவகார்த்திகேயன்.

No comments:
Post a Comment