Monday, 23 March 2015

இந்தியா-பாகிஸ்தான் நிதிப் பிரச்சனை: இங்கிலாந்தில் பஞ்சாயத்து…


கடந்த 67 ஆண்டுகளாக நடந்து வந்த இந்தியா-பாகிஸ்தானின் ‘ஹைதராபாத் நிஜாம் நிதி வழக்கில்’ பாகிஸ்தான் இந்த நிதியை உரிமை கோர முடியாது என்று இங்கிலாந்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
இந்தியா விடுதலை பெற்ற போது இந்தியாவில் 600க்கும் மேலன சுதேச மாகாணங்கள் இருந்தன. இதில் பெரும்பாலான மாகாணங்கள் இந்தியாவுடன் இணைந்தன. அப்போது ஹைதராபாத்தை ஆண்டுவந்த நிஜாம், பாகிஸ்தான் ஆதரவாளராக இருந்தார்.
இதனால், இந்தியாவுடன் இணைய மறுத்தார். இந்நிலையில், 1948ம் ஆண்டு, ஹைதராபாத் நிஜாம், இங்கிலாந்தில் இருந்த பாகிஸ்தான் தூதரின் பெயரில் இன்றைய மதிப்பில் சுமார் 9 கோடி ரூபாயை டெபாசிட் செய்தார்.
நாளடைவில் ஹைதராபாத்தும் இந்தியாவுடன் இணைந்தது. இதனை அடுத்து, பாகிஸ்தான் தூதரின் பெயரில் டெபாசிட் செய்யப்பட்ட பணம், ஹைதராபாத் அரசிற்கு சொந்தமானது என்பதால், அது இந்தியாவுக்குச் சொந்தம் என்று இந்தியா உரிமை கொண்டாடியது.
இதற்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்தது. இது குறித்து வழக்கு தொடரப்பட்டு விசாரணை செய்யப்பட்டது. இந்த வழக்கில், ஹைதராபாத்தின் நிதிக்கு பாகிஸ்தான் உரிமை கொண்டாடுவது நியாயமற்ற ஒன்று என்றும், இதில், இந்தியாவுக்கு வழக்கு செலவாக 1.40 கோடி ரூபாய் வழங்க இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இங்கிலாந்து பாகிஸ்தான் தூதுவரின் பெயரில் இருக்கும் பணமானது, இந்தியாவுக்கு நஷ்ட ஈடு, இங்கிலாந்து வன்கிக்கு ஒரு பகுதி மற்றும் நிஜாமின் வாரிசுகளுக்கு ஒரு பகுதி என்று பிரித்துக் கொடுக்கப்படும்.

No comments:

Post a Comment