Monday, 23 March 2015

தோனியின் வாழ்க்கையில் விளையாடிய நடிகைகள்..?


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்றை வைத்து பாலிவுட்டில் ஒரு படம் தயாராகி வருகிறது என்பதை நாங்கள் ஏற்கனவே அறிந்திருந்தோம்.
இந்த படத்தை தி வெட்னஸ்டே, ஸ்பெஷல் 26 போன்ற படங்களை இயக்கிய நீரஜ் பாண்டே என்பவர் இயக்கி வருகிறார். இதில் தோனி கேரக்டரில் சுஷாந்த் சிங் என்பவர் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் வெளீயான பிகே படத்தில் அனுஷ்கா சர்மாவின் காதலனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் தோனியின் கிரிக்கெட் வாழ்க்கையில் ஏற்பட்ட பல சுவாரசியமான சம்பவங்களை இணைத்துள்ளாராம் இயக்குநர் நீரஜ் பாண்டே. மேலும் தோனியின் திருமணத்திற்கு முன்னர் அவருடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகைகளின் கேரக்டர்களும் இந்த படத்தில் இணைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
தோனி ஏற்கனவே அசின், லட்சுமிராய் மற்றும் பாலிவுட் கனவுக்கன்னி கோமல்ஜா ஆகிய நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார். இந்த கேரக்டர்களில் சம்பந்தப்பட்ட நடிகைகளே நடிப்பார்களா? அல்லது அவர்களுக்கு பதில் புதுமுகங்களை நடிக்க வைக்கலாமா என படகுழுவினர் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.
எம்.எஸ்.தோனி என்று தலைப்பு  வைக்கப்பட்டுள்ள இப்படம் இந்த வருட இறுதியில் திரைக்கு வரும் என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment