முதல் படத்தில் நடிக்கும் போது குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் பல நடிகைகள் இரண்டு மூன்று படங்களிலேயே கவர்ச்சியாக நடிக்க முன் வருகின்றனர். இதற்கு உதாரணமாக பல நடிகைகளை சொல்லிக்கொண்டே போகலாம். தற்போது அந்த லிஸ்டில் இணைந்திருப்பவர் மேகா பட நாயகி சிருஷ்டி.
தெலுங்கு படத்தின் வழியாக தமிழ் சினிமாவுக்கு வந்த மும்பை மாடல் அழகியான சிருஷ்டி டாங்கே முதல் படமான மேகா படத்தில் குடும்ப பாங்கான ரோலில் நடித்து அசத்தினார். இப்படம் பெரிய அளவில் ஓடாவிட்டாலும். பரவலான பாராட்டை பெற்றது. சிருஷ்டியின் அழகும், நடிப்பும் பேசப்பட்டது.
அதற்கு பிறகு நடித்த டார்லிங் , எனக்குள் ஒருவன் படத்தில் கொஞ்சம் கிளாமரான வேடத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களிலுமே அவர் செகண்ட் ஹீரோயினாக நடித்திருப்பார். ஆனால் தற்போது நேருக்கு நேர், கத்துக்குட்டி, புரியாத ஆனந்தம், புரியாத ஆரம்பம், போன்ற படங்களில் அவர் கவர்ச்சியாக நடித்தாலும் சோலோ ஹீரோயினாக நடித்து வருகிறார்.
மேலும் தற்போது புதிதாக விஜய் வசந்த் நடித்து வரும் கற்பவை கற்றபின் என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்து வருகிறார். கவர்ச்சியாக நடிக்கவும் இவர் தயங்குவதில்லை என்பதால் தொடர்ந்து சிருஷ்டிக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. பல சின்ன பட்ஜெட் இயக்குநர்கள் வரிசையாக நின்று சிருஷ்டியை புக் செய்து வருகிறார்களாம்.

No comments:
Post a Comment