ராயல் என்ஃபீல்ட் என்றாலே மிகவும் கனமான வாகனம் என்பது தான் அனைவரின் எண்ணமாகவும் இருக்கும். எனினும், வாட்டசாட்டமாக இருக்கும் ஒவ்வொருவரின் ஆசையும் ராய்ல் என்ஃபீல்ட் பைக் ஓட்ட வேண்டும் என்பதாகத்தான் இருக்கும்.
ஏனெனில் அதுதான் பார்க்க தோரணையாக இருக்கும் என்ற எண்ணம். அதுவும் ஒரு வகையில் உண்மை தான். எனினும், ராயல் என்ஃபீல்ட் என்றாலே அதிக கனம் என்பதை மாற்றி புதிதாக கஃபே ரேஸர் டைப் பைக் ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த நிறுவனம்.
ராயல் என்ஃபீல்டு Continental GT இதன் மொத்த எடை 200 கிலோ கூட கிடையாது. இதன் மற்ற தயாரிப்புகளுடன் ஒப்பிடும் போது இந்த எடையெல்லாம் ஒன்றுமில்லை என்றுதான் கூற வேண்டும்.
இது ரேஸிங் பைக் என்றாலும் இது இரண்டு பேர் அமர்ந்து செல்லக் கூடிய வகையில் உள்ளது. இதன் 535சிசி எஞ்சீன் மணிக்கு 131 கிமீ வேகத்தில் செல்லக் கூடிய திறன் வாய்ந்தது.
மேலும், 5 ஸ்பீட் கியர் சிஸ்டம் கொண்டுள்ளது. டுயல் டிஸ்க் பிரேக் சிஸ்டம் கொண்டு செயல்படுகிறது. இதன் எஞ்சீன் பெட்ரோல் மூலம் இயங்குகிறது. இந்த ராயல் என்ஃபீல்டு Continental GT-யானது, 28KMpl மைலேஜ் கொடுக்கும் என்று தயாரிப்பு நிறுவனத்தால் உத்திரவாதம் கொடுக்கப்படுகிறது.
இதன் விலை சுமார், ரூ. 2 லட்சத்திலிருந்து 2.20 லட்சங்களுக்குள் கிடைக்கின்றது.

No comments:
Post a Comment