Wednesday, 4 March 2015

உன் ஆபாச படமும் வெளியாகலாம்.. அசினுக்கு நடிகர் எச்சரிக்கை..!


ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்த அசின் இப்போது என்ன செய்துக்கொண்டிருக்கிறார் என கூகுளில் தேட ஆரம்பித்து விட்டார்கள் ரசிகர்கள்..
’எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்த அசின், மளமளவென ஏகப்பட்ட படங்களில் நடித்தார். விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உட்பட அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்தார்.
தமிழில் வெற்றிபெற்ற கஜினி படத்தை இந்தியில் அமீர்கான், அசினை வைத்து ரீமேக் செய்தார் ஏ.ஆர்.முருகதாஸ். 2008ல் வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானதோடு, பாலிவுட்டில் அசினுக்கு நல்ல அறிமுகத்தையும் கொடுத்தது. இதனால் தமிழில் கவனம் செலுத்தாமல் முழுகவனத்தையும் இந்தியிலே செலுத்தினார்.
ஆனால் தற்போது பாலிவுட்டிலும் அவருடைய மார்க்கெட் டல்லடிக்க தொடங்கி இருக்கிறது. அபிஷேக் பச்சனின் ‘ஆல் இஸ் வெல்' படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். இதனால் ஓய்வு நேரத்தில் ஊர் ஊராக சுற்றி பொழுதை கழிப்பதுடன் எப்போதாவது வரும் விளம்பர படங்களை மட்டுமே இப்போது நம்பிக்கொண்டிருக்கிறார். நீண்ட நாட்கள் படப்பிடிப்பில்லாமல் வீட்டில் இருந்த அசின், சமீபத்தில் பட ஷூட்டிங்கில் பங்கேற்றார்.
இதனால் டுவிட்டர் பக்கத்தில் முன்புபோல் பிஸியாக இல்லாவிட்டாலும் அடுத்தடுத்து வரும் செல்போன் ஆப்ஸ்களை பயன்படுத்த தவறுவதில்லையாம் அசின். புதிதாக இன்ஸ்டாகிராம் இணைய தள பக்கத்தில் இணைந்திருக்கிறார். சூட்டோடு சூடாக தோழிகள் இருவரை கட்டிப்பிடித்து முத்தம் தந்து கொஞ்சுவதுபோல் புகைப்படமும் வெளியிட்டிருக்கிறார்.
சமீபகாலமாக மார்பிங் செய்யப்பட்ட நடிகைகளின் ஆபாச படங்கள் இன்ஸ்டாகிராம் மூலம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நேரத்தில் அசின் இதில் இணைந்திருப்பதால் சில விஷமிகளால் உன்னுடைய ஆபாச போட்டோக்களும் வெளிவரலாம் என்று, உஷாராக இருக்கும்படி தோழிகளும், நெருக்கமான பாலிவுட் நடிகர் ஒருவரும் அவருக்கு அறிவுரை செய்திருக்கின்றனராம்.

No comments:

Post a Comment