கோவையில் விபசாரத்தில் ஈடுப்படுபவர்களை பிடிக்க போலீஸார் நடத்திய சோதனையில் கல்லூரி மாணவி ஒருவர் சிக்கியுள்ளார். கோவை அவினாசி ரோட்டிலுள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில், விபசாரம் நடைபெறுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலை தொடர்ந்து, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையிலான தனிப்படையினர் ஹோட்டலுக்குள் அதிரடியாக புகுந்து அங்கிருந்த இன்ஜினியரிங் மாணவி உள்பட 3 பெண்களை பிடித்துள்ளனர்.
இதில் ஒரு பெண்ணிடம் விசாரித்தபோது அவர் கோவையை அடுத்த கருமத்தம்பட்டியில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் b tech. படித்து வருவது தெரியவந்தது. மதுரையைச் சேர்ந்த இவர் அதே கல்லூரியில் படிக்கும் மாணவரை காதலித்திருக்கிறார்.
இருவரும் நெருங்கி பழகியிருக்கிறார்கள். இந்த காட்சிகளை வாலிபர் மாணவிக்கு தெரியாமல் வீடியோ எடுத்திருக்கிறார். சிறிது காலத்துக்குப் பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர். சில நாட்களுக்கு பின் மீண்டும் அந்த மாணவர், மாணவியை சந்தித்திருக்கிறார். அப்போது ‘நாம் உல்லாசமாக இருந்த காட்சியை வீடியோ எடுத்து வைத்திருக்கிறேன். நான் கேட்கும் பணத்தை நீ தராவிட்டால் அதனை இணையதளங்களில் வெளியிட்டு விடுவேன்' என மிரட்டியிருக்கிறார்.
இதற்க்கு பயந்த அந்த மாணவி இணையதளத்தில் காட்சி வெளியாகிவிடக்கூடாது என்பதற்காக, முதலில் தான் அணிந்திருந்த நகைகளை விற்று கொடுத்திருக்கிறார். அதன் பின்னரும் அந்த மாணவர் தொடர்ந்து பணம் கேட்கவே விபசாரத்தில் ஈடுபட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தை அந்த மாணவரிடம் கொடுத்தது தெரியவந்தது. போலீசாரிடம் சிக்கிய 3 பேரும் கோவையில் உள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
கைதான விபசார கும்பலிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இணையத்தில் படம் வெளியானால், மானம் போய்விடும் என்று நினைத்த அந்த மாணவி, ஏன் தினசரி தனது மானத்தையும், உடலையும் விற்பனை செய்தார் என்ற விஷயம் இன்னும் போலீசாருக்கு தெரியவில்லை. இவை அனைத்தும் கதையா, அல்லது உண்மையா என அப்பெண்ணை விசாரித்து வருகின்றனர்.

No comments:
Post a Comment