Monday, 2 March 2015

”நிர்பயா அமைதியாக இருந்திருந்தால் கற்பழித்ததோடு விட்டிருப்போம்”


2012ம் ஆண்டு ஒட்டு மொத்த உலகின் பார்வையையே இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்த சம்பவம் டெல்லி கற்பழிப்புச் சம்பவம். நிர்பயா என்ற பிஸியோதெரபி மாணவி, ஓடும் பேருந்தில், தன் ஆன் நண்பர் முன்னிலையில், ஆறு பேரால் கற்பழிக்கப்பட்டு கொடூரமாகத் தாக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரில் ஒருவர் மைனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு நடந்து வரும் வேளையில், ஒருவர் சிறையிலேயே துக்குப் போட்டு இறந்து விட்டார்.
ஏனையோர் மீது வழக்கு நடந்து வரும் நிலையில், பிபிசி நிறுவனம், இந்த குற்றவாளிகளிடம் ஒரு விசாரணை செய்து அதை ஒரு ஆவணப்படமாக மகளிர் தினத்தன்று வெளியிட உள்ளது.
இதற்காக, பிபிசி நிறுவனர் எடுத்த பேட்டிக்கு பதிலளித்த குற்றவாளி முகேஷ் சிங் என்பவர் சிறையில் இருந்தபடியே பேசியதாவது:
பாலியல் பலாத்காரத்திற்கு ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பொறுப்பு. அந்த பெண்ணின் ஆண் நண்பர் மட்டும் எங்களை எதிர்த்து போராடாமல் இருந்திருந்தால் நாங்கள் அவ்வளவு கொடூரமாக தாக்கியிருக்க மாட்டோம். அன்று பேருந்தில் நடந்தது ஒரு விபத்து. பலாத்காரம் செய்யும்போது அந்த பெண் எங்களை எதிர்த்து போராடியிருக்கக் கூடாது.
அமைதியாக இருந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்ய அனுமதித்திருக்க வேண்டும். அப்படி அவர் செய்திருந்தால் அனைத்தும் முடிந்த பிறகு அவரின் நண்பரை மட்டும் அடித்திருந்திருப்போம்.
இரண்டு கையும் சேர்ந்து தட்டினால் தான் சப்தம் வரும். நல்ல பெண் இரவு 9 மணிக்கு ஊர் சுற்ற மாட்டார். ஆணும், பெண்ணும் சரி சமம் அல்ல. வீட்டு வேலையை செய்வது தான் பெண்களின் வேலை.
இரவு நேரத்தில் பார், டிஸ்கோக்களுக்கு செல்வது, தவறானவற்றை செய்வது, தவறான ஆடைகளை அணிவது பெண்களுக்கு சரியல்ல. பெண்களில் 20 சதவீதம் பேர் நல்லவர்கள்.

தடையை மீறி ஒளிபரப்பு ஆனது நிர்பயா ஆவணப்படம்!!

No comments:

Post a Comment