ஹாலிவுட் இயக்குநர் கேமரூனுக்கு 'அவதார்' படம் போல, இயக்குநர் ரிச்சர்ட் லிங்லேட்டருக்கு ‘பாய்ஹூட்’ படம் என்று சொல்லலாம். காரணம் கிட்டதட்ட 12 வருடமாக இப்படத்தை எடுத்து வந்தார்.
அவதார் படம் அனிமேஷனுக்காக அவ்வளவு கால அவகாசம் தேவைப்பட்டது. அப்போ இந்தப் படமும் அனிமேஷன் படமா இருக்குமோ என்று தாப்பாக கணக்கு போட வேண்டாம்.. படத்தை பார்த்த பலருக்கும் தெரிந்திருக்கும் எதற்காக 12 வருட இடைவெளி என்று.
படத்தோட கதைக்காகதான் இவ்வளவு பெரிய இடைவெளி. அதாவது ஒரு பையனோட வாழ்க்கையை, அவன் வளர்ச்சியை 6 வயதில் இருந்து, 18 வயது வரைக்கும் அதாவது ஹை-ஸ்கூல் முடிச்சு காலேஜ் போய் சேரும் வரைக்கும் ரெண்டே முக்கால் மணிநேரத்தில் அட்டகாசமான படமா எடுத்து வெளியிட்டிருக்கார் இயக்குநர்.
படம் முழுவதும் வரும் கேரக்டர்களாக பையன் மேசன் (Ellar Coltrane), அக்கா சமந்தா (Lorelei Linklater) (ஆங்கில sa-man-tha.. நம் உள்ளூர் அழகி இல்லை..) அப்புறம் அம்மா, அப்பா.. இதில் அம்மாவுக்கும், அப்பாவுக்கும் எக்கச்சக்கமான இல்லறத்துணைகள். படம் முதல் பாதிமுழுக்க American way of parenting, divorce, single parent தீம்களை மையக்கருவாக கொண்டு அதனால் பிள்ளைகள் எப்படி பாதிக்கப்டுகிறார்கள். அவர்கள் எதிர்நோக்கும் சூழ்நிலைகள் (தொடர்ச்சயான வீடு மாறுதல், ஸ்கூல் மாறுதல்) போன்ற immediate impactகளை காணலாம்.
இரண்டாம் பாதியில்தான் படம் முழுக்க மேசனின் ஃபோக்கஸுக்கே வருகிறது. கொஞ்சம் மெச்சூரிட்டியுடன், பியூட்சர் பற்றிய ஐயங்களுடனும் அவன் வாழ்க்கையை எதிர்நோக்கும் விதமும், எடுக்கும் தீர்மானங்களாகவும் கதை செல்லும். அவன் நடந்து கொள்ளும் போக்கில் அவனது பெற்றோர்களின் பாதிப்பு காரணமான லாஸ்டிங் இம்பேக்ட்டின் சாயல்களும் அடங்கியிருப்பதை காணலாம்.
கதையை சற்று லூஸாக வைத்துக்கொண்டு முழுக்க முழுக்க காட்சிகளலும், கேரக்டர் டெவலப்மென்டிலும் அஸ்திவாரத்தை இறக்கியிக்கும் ஒரு படம். லிங்லேட்டரின் முந்தைய படங்களை பார்த்திருப்பவர்களுக்கு அவர் இந்த ஏரியாவில் எவ்வளவு பெரிய எக்ஸ்போர்ட் என்பது தெரிந்திருக்கும்.
கூடவே காட்சக்கு காட்சி கைகொடுக்கும் வசனங்கள்.. பெற்றோர்கள் தங்களுக்குள் விவாதம் செய்வதாயிருக்கட்டும், டீச்சர் பியூட்சர் பத்தி அட்வைஸ் செய்வதாயிருக்கட்டும், சகஜமாக 'மனிதர்களில் எத்தனைவிதம்' என்று உரையாடுவதாயிருக்கட்டும்.. நாம் பார்த்துப் பார்த்துப் புளித்துப்போன சீன்களில் கூட நிமிர்ந்து உட்காரவைக்கும் வசனங்கள். அதனால் படம் பெரிய அளவில் பேசப்பட்டது. வெறும் 4 மில்லியனில் எடுக்கப்பட்ட இப்படம் 10 மடங்கு அதிகமாக பாக்ஸ் ஆபீஸில் வசூல் ஈட்டியிருக்கிறது.
நடந்து முடிந்த ஆஸ்கர் விருதில் 6 விருதுகளுக்கான பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் சிறந்த துணை நடிகைக்கான விருது மட்டுமே இந்தப் படத்துக்குக் கிடைத்தது. இதில் ஏமாற்றம் அடைந்தாலும் கோல்டன் குளோப்ஸ் திரைப்பட விருது விழாவில் இவ்வாண்டின் சிறந்த திரைப்படத்திற்கான விருதை பெற்றது. இயக்குநர் ரிச்சர்ட் லிங்லேட்டருக்கும் சிறந்த இயக்குநருக்கான விருதும் கிடைத்தது.

No comments:
Post a Comment