ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்களான பிரசாந்த் பூஷன் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர் கெர்ஜ்ரிவாலை பதவியிலிருந்து இறக்க முயல்வதாக பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
டெல்லியில் வரலாறு காணாத வகையில், மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பா.ஜ.க.,வை வென்று சாதனை படைத்தது ஆம் ஆத்மி கட்சி. தனக்கு இரண்டாவது வாய்ப்பளித்த டெல்லி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, தேர்தல் வாக்குறுதிகளை சொன்னபடி நிரைவேற்றி வருகிறார், கெஜ்ரிவால்.
நேற்றைய முந்தினம் ஆம் ஆத்மி கட்சியின் தேசியப் பொதுக் கூட்டம் நடந்து முடிந்தது. நடந்து முடிந்த டெல்லி சட்டசபை தேர்தல் வேட்பாளர் தேர்வில் 12 வேட்பாளர்கள் மீது கிரிமினல் பின்னணி இருப்பதாக பூஷண் கொடுத்தும், இந்த அந்த வேட்பாளர்களில் 2 பேர் மட்டுமே கட்சி மேலிடத்தால் நீக்கப்பட்டனர்.
இதைக் குறிப்பிட்டு கூட்டத்தில் பலர் கெஜ்ரிவாலின் மீது அதிரிப்தியை தெரிவித்தனர். இந்நிலையில், கெஜ்ரிவாலுக்கு ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்களான பிரசாந்த் பூஷன் மற்றும் யோகேந்திர யாதவ் ஆகியோர் கெஜ்ரிவாலுக்கு கடிதம் ஒன்றை எழுதினர்.
இந்த கடிதத்தில், " நமக்காக உழைத்த தொண்டர்கள் தான் கட்சியின் வெற்றிக்கு காரணம். ஆனால் அவர்களுக்கு தர வேண்டிய பாராட்டை நாம் தரவில்லை. மீண்டும் ஒரு தனி நபரை சுற்றியே நமது கட்சியும் வளர்கிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.'
"கட்சிக்கு சந்தேகத்திற்கிடமான நான்கு கம்பெனிகளிடம் இருந்து பெறப்பட்ட தலா 5 லட்சம் ரூபாய்க்கு என்ன கணக்கு இருக்கிறது. 10 லட்சத்திற்கும் மேல் கிடைக்கும் நிதியை யார் அனுப்பினாலும், அவர்கள் நேர்மையானவர்கள் தானா என விசாரிக்க வேண்டும். ஆனால் 20 லட்சம் ரூபாய் பெறப்பட்ட விஷயத்தில் நாம் சரியாக விசாரிக்கவில்லையோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கடித்ததிற்கு கட்சி மேலிடம் இது வரை பதில் மனு கொடுக்கவில்லை. இதனால், ஆம் ஆத்மிக் கட்சித் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவாலை தலைவர் பதவியிலிருந்து நீக்கும் நடவடிக்கைகளை, மூத்த தலைவர்களான பிரஷான்த் பூஷணும், யோகேந்திர யாதவும் செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதனை கட்சியின் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் சிங்கும் ஒப்புக் கொண்டுள்ளார். இது குறித்து, செய்தித் தொடர்பாளர் சஞ்சய் சிங் கூறியதாவது: "சிலர் கட்சியை கேலிக்கூத்தாக்கி விட்டனர். மூத்த தலைவர்கள் சிலர் கெஜ்ரிவாலை நீக்க முயல்கின்றனர். அப்படி நடந்தால் கட்சியை எப்படி நடத்துவது என்பது குறித்து தேசிய செயற்குழுவைக் கூட்டி விவாதிப்போம்.”
எனவே கெஜ்ரிவாலை நீக்குவது தொடர்பான இறுதி முடிவு, நடக்க ஆம் ஆத்மியின் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:
Post a Comment