Monday, 2 March 2015

இங்கிலாந்து அரண்மனையில்.. ஷேம் ஷேம் பப்பி ஷேம்...! (வீடியோ)


பக்கிங்ஹாம் அரண்மனை இங்கிலாந்து அரசருடைய அதிகாரப்பூர்வ இலண்டன் இல்லமும், முக்கிய பணியிடமும் ஆகும். சிட்டி ஆஃப் வெஸ்ட்மினிஸ்டரில் அமைந்துள்ள இந்த அரண்மனை மாநில நிகழ்ச்சிகளுக்கும் முக்கிய விருந்தோம்பலுக்குமான அமைப்பை கொண்டுள்ளது.
இந்த அரண்மனையில், வாலிபர் ஒருவர் நிர்வாணமாக தொங்கிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில், அரண்மனையின் முன்புள்ள கிரின் பார்க்கில் ராணுவ வீரர்கள் குதிரையில் அணிவகுத்து செல்கின்றனர். அப்போது நிர்வாண நிலையில் வாலிபர் ஒருவர் அரண்மனையின் ஜன்னலில் துணியை கட்டியபடி மேலேற முயற்சிக்கிறார்.
மேலே ஏரியதும் துணி வழுக்கி திடீரென கீழே விழுந்து விடுகிறார். இந்த வீடியோவை பார்வையாளர்களில் யாரோ ஒருவர் படம் பிடித்து விடுகிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆனால், இந்த வீடியோவில் பயணிகள் இருவர் அவற்றைப் பார்த்து சிரிப்பது போலவும் பதிவாகியுள்ளது. எனவே இந்த வீடியோ, உண்மையானதா இல்லை பொய்யாக சித்திரிக்கப்பட்டதா என்பது தெரியவில்லை.
இதோ அந்த வீடியோ கீழே...

No comments:

Post a Comment