Tuesday, 3 March 2015

த்ரிஷாவுக்கு ஏன் இந்த தேவையில்லாத வேலை..!


திரையுலகில் பத்தாண்டுகளுக்கு மேலாக நடித்துவரும் த்ரிஷாவுக்கு விரைவில் தயாரிப்பாளர் வருண்மணியனிடம் திருமணம் நடைப்பெறவிருக்கிறது. அவர் தற்போது ஜெயம் ரவிக்கு ஜோடியாக அப்பாடக்கர் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் வெளியிட்ட ஒரு புகைப்படம் ரசிகர்களிடையே பீதியை கிளப்பியிருக்கிறது. தற்போது நாட்டின் பல்வேறு மாநிலங்களை பன்றிக் காய்ச்சல் மிரட்டி வருகிறது. இதுவரை பன்றிக் காய்ச்சலுக்கு 1000-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
மேலும் பலர் பன்றிக் காய்ச்சல் தாக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சமீபத்தில்கூட பாலிவுட் நடிகை சோனம் கபூர் இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இந்நிலையில் தான் த்ரிஷா பீதியை கிளப்பியுள்ளார்.
நடிகை த்ரிஷா தன்னுடைய டுவிட்டர் தளத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பதறிப் போய்விட்டனர். காரணம் அந்த புகைப்படத்தில் த்ரிஷா, ஜெயம் ரவி ஆகியோர் மாஸ்க் அணிந்தபடி இயக்குநர் சுராஜுடன் இருக்கின்றனர்.
த்ரிஷா மாஸ்க் போட்டிருந்ததை பார்த்துவிட்டு அவருக்கு பன்றிக் காய்ச்சல் ஏதாவது வந்துவிட்டதோ என்று ரசிகர்கள் கவலை அடைந்தனர். இதை அறிந்த த்ரிஷா தனக்கு ஒன்றும் இல்லை, நலமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கையாக தான் மாஸ்க் அணிந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment