பிரபல பத்திரிக்கை நிறுவனமான ‘போர்ப்ஸ்’ உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் இந்த வருடமும் இந்தியாவின் முகேஷ் அம்பானி இந்திய அளவில் முதலிடம் பிடித்தார்.
போர்ப்ஸ் நிறுவனம் உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் இந்தியாவின் முகேஷ் அம்பானி 1லட்சத்து 30ஆயிரம் கோடி சொத்துக்களுடன் உலகளவில் 39வது இடத்திலும், இந்திய அளவில் முதல் இடத்திலும் உள்ளார். இவர் முதலிடத்தைப் பிடிப்பது தொடர்ந்து 8வது முறையாகும்.
மேலும், உலக பணக்காரரான பில்கேட்ஸ் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். இவர் 4லட்சத்து 91ஆயிரம் கோடி சொத்துகளுடன் அவர் முதலிடத்தில் இருக்கின்றார். இவர் முதலிடம் பெறுவது 16வது முறையாகும்.
இவர்கள் மட்டுமின்றி இப்பட்டியலில் 90 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment