தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது ’ரஜினி முருகன்’ படத்தில் நடித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’காக்கி சட்டை’ படம் கலந்த விமர்சங்களை பெற்று வருகிறது.
இப்படத்தில் சிவகார்த்திகேயன் டான்ஸ், ஃபைட், காமெடி என அனைத்திலும் தன்னால் முடிந்தளவுக்கு சிறப்பாக செய்திருக்கிறார் என்று கூறப்பட்டாலும் அவரின் முந்தைய படங்கள் அளவுக்கு இல்லை என்ற கருத்தே பரவலாக உள்ளது.
இந்நிலையில் சிவகார்த்திகேயனை வைத்து பொன்ராம் இயக்கிவரும் ரஜினி முருகன் படம் 40 கோடிக்கு பிசினஸ் ஆகியுள்ளதாம். இதை அறிந்த சில முன்னணி நடிகர்கள் அதற்குள் இவருக்கு இவ்வளவு பெரிய மார்கெட்டா என்று அதிர்ச்சியில் உள்ளார்களாம்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும், ஈராஸ் இன்டர்நேஷ்னல் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இமான் இசை அமைக்கும் இப்படத்தை ஏப்ரல் மாதம் வெளியிட இருக்கிறார்களாம் படக்குழுவினர்.

No comments:
Post a Comment