Tuesday, 3 March 2015

சிங்கப் பூரில் தமிழ்க் கூலித் தொழிலாளிக்கு 12 கசையடி, 16 வருடம் சிறை…!!


சிங்கப் பூரில் தமிழ் கூலித் தொழிலாளி ஒருவருக்கு, மற்றொரு தமிழரை கொலை செய்த குற்றத்திற்காக, சிங்கப்பூர் நீதிமன்றம் 16 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுத்துள்ளது.
திருச்சியைச் சேர்ந்த பெரியசாமி என்ற 20 வயது இளைஞர், சிங்கப்பூர் சென்று கூலித் தொழில் செய்து வருகிறார். சிங்கப்பூரில் இவருடன், அறிவழகன்(31) என்பவரும் ஒரே அறையில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.
இருவரும் கடந்த பிப்ரவரி 7ம் தேதி தைப்பூசத்தன்று, சிங்கப்பூரின் லிட்டில் இந்தியா என்ற இடத்திற்குச் சென்றுள்ளனர். அங்கு அறிவழகனின் பர்ஸ் காணாமல் போனது.
பெரியசாமியிடம், பர்ஸை பார்த்தாயா என்று அறிவழகன் கேட்டதற்கு பெரியசாமி, அவரை அருகில் இருந்த கேம்பாங் ஜாவா (Kampong Java) மேம்பாலத்தின் அருகில் அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு அவர் எதிர்பாராத சமயத்தில் பெரிய கல்லை எடுத்து தலையில் தாக்கியுள்ளார். கீழே விழுந்த பெரிய சாமி மீது, மரக்கிளைகள் மற்றும் கான்கிரீட் சிலாப்களை வைத்துத் தாக்கியுள்ளார். இதனால், பெரிய சாமி அங்கேயே இறந்து விட்டார். பெரிய சாமி அறிவழகனின் மொபைலை எடுத்துக் கொண்டு தலைமறைவாகிவிட்டார்.
அறிவழகனின் சடலத்தை வைத்து விசாரணை செய்து வந்த போலீசார், கண்காணிப்புக் கேமிரா உதவியுடன் பெரியசாமியை பிப்ரவரி 12ம் தேதி, கண்டுபிடித்து விசாரித்துள்ளனர்.
இந்த விசாரணையில், பெரிய சாமி, அறிவழகனது பர்ஸை திருடி அதிலிருந்த பணத்தை கொள்ளை அடித்துவிட்டு சாக்கடையில் போட்டு விட்டதாகவும், பின்னர் அவரைக் கொன்றுவிட்டு மொபைலைத் திருடிச் சென்றதாகத் தெரிவித்தார்.
பின்னர் சிங்கப்பூர் போலீசார், பெரிய சாமியை, சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, பெரிய சாமிக்கு, 12 கசையடிகளும், 16 ஆண்டு சிறையும் விதித்து தீர்பளித்தார்.

No comments:

Post a Comment