Sunday, 1 March 2015

இனி Gmail, Yahoo பயன்படுத்தக் கூடாதாம்..!! அரசுக்கே அரசு உத்தரவு!!


இந்தியாவின் பாதுகாப்பிற்காக இந்திய அரசு அதிகாரிகள் ஜிமெயில், யாஹூமெயில் உள்ளிட்ட தனியார் மெயில் சர்வீஸ்களை பயன்படுத்தக் கூடாது என்று இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 18ம் தேதி 'இந்திய அரசு E-mail கொள்கை' என்ற பெயரில் அனைத்து அரசு அலுவகங்களுக்கும் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின் படி, நாட்டின் தொழில்நுட்ப வளங்களை பயன்படுத்துவது குறித்து எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகளின் படி, அரசு தொடர்பான எந்த ஒரு தொடர்புகளையும் 'நிக்' வழங்கும் இ-மெயில் சேவையை மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்றும் மத்திய அரசு அலுவலகங்களில் தனியார் நிறுவனங்களான ஜி மெயில் மற்றும் யாஹு மெயில் போன்ற நிறுவனங்களின் மெயில் சேவையை பயன்படுத்த தடை விதிக்கப் பட்டுள்ளது என்று குறிப்பிடப் பட்டிருந்தது.
இந்தியாவின் அரசு அலுவகங்கள், ஜிமெயில் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதால் தான் அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தியாவை வேவு பார்து வருகின்றன. இதனை தடுக்கும் முகமாகவே இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment