Sunday, 1 March 2015

அஜித் மகனுக்குமா..?


அஜித் தும்பினால் கூட அதை ட்ரெண்டாக்கி விடும் அவரது ரசிகர்கள் தற்போது அஜித்துக்கு பிறந்த குட்டி தலயையும் ட்ரெண்டாக்கி விட்டனர்.
நடிகர் அஜித் மற்றும் அவரது மனைவி ஷாலினிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஷாலினி அஜித் இன்று காலை 4:30 மணி அளவில் சென்னை தனியார் மருத்துவமனையில், அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
தாயும், சேயும், நலமாக இருப்பதாகவும், உறவினர்களும், நண்பர்களும் குழந்தையைக் காண வந்து செல்வதாகவும், செய்தியாளர் பல்லவி இன்று காலையே படத்துடன் தன் டுவிட்டர் மூலம் வெளியிட்டார்.
இதை அறிந்த தல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். அதோடு சமூக வலைத்தளமான டுவிட்டரில் #KuttyThala என்ற டாக் கிரியேட் செய்து இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து விட்டனர்.

No comments:

Post a Comment