நேபாளத்தில் பல தலைமுறைகளாக மக்களிடையே பிரசித்தி பெற்றிருந்த நேபாள சீஸுக்கு (Nepal cheese) எதிர்பாராத வகையில் வெளிநாடுகளில் திடீர் மவுசு ஏற்பட்டுள்ளது. ஆனால், மக்களுக்கான உணவாக அல்லாமல் நாய்களுக்கான சிற்றுண்டியாக வெளிநாடுகளில் பயன்படுத்தப்படுவதுதான் வேடிக்கை.
'சுர்பி' (Churpi) என உள்ளூரில் அறியப்பட்ட இந்த சீஸை சுஜான் ஷ்ரேஸ்தா என்பவரின் நிறுவனம் தயாரிக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த தனது நண்பர் ஒருவர் நேபாளத்துக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டபின் தாயகத்துக்கு திரும்பியபோது மேற்படி சீஸை தனது நாய்க்காக வாங்கிச்செல்வதாக கூறியதைக் கேட்டு தான் வியப்படைந்தாக சுஜான் தெரிவித்துள்ளார்.
'இந்த சீஸை நாய்க்கு வழங்கப்போவதாகக் கூறியதும் முதலில் எமக்கு ஆத்திரம் ஏற்பட்டது. ஆனால், பின்னர் நாம் அதை ஒரு புதிய வர்த்தக வாய்ப்பாக கருதினோம்' என அவர் கூறியுள்ளார். பின்னர் சுஜான் ஷ்ரேஸ்தா.
தனது நண்பர்கள் இருவருடன் அமெரிக்காவின் வாஷிங்டன் டி.சி. நகரில் கடையொன்றை ஆரம்பித்து நாய்களுக்கு மட்டுமான உணவாக இந்த சீஸை விற்பனை செய்ய ஆரம்பித்தார். அதையடுத்து இந்த சீஸ் வேகமாக விற்பனையாக ஆரம்பித்தது. தற்போது வருடாந்தம் அமெரிக்கா மற்றும் ஜப்பானுக்கு 200 டன் சீஸை அவரின் நிறுவனம் ஏற்றுமதி செய்கிறது.

No comments:
Post a Comment