Friday, 20 March 2015

ஸ்டேட் விட்டு ஸ்டேட் போய் பூஜை செய்யும் அ.தி.மு.க. தொண்டர்கள்!!


தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனைக்கு உட்பட்டு தற்போது அதற்கான மேல் முறையீட்டு மனு விசாரணையில் இருக்கின்றது.
இந்த வழக்கில் வெற்றி பெற்று ஜெயலலிதா தண்டனையில் இருந்து வெளிவர தமிழகத்தின் பல ஊர்களில் அ.தி.மு.க கட்சியினர் பூஜைகளையும் யாகங்களையும் நடத்திவருகின்றனர்.
இந்நிலையில் தமிழகம் மற்றும் கேரளாவின் எல்லைப் பகுதியில் இருக்கும் பாலக்காட்டின் புத்தூர் முருகன் கோவிலில் இன்று சிறப்பு பூஜை ஏற்பாடு செய்துள்ளனர்.
இதற்கான துண்டு பிரசுரங்களை அ.தி.மு.க.வினர் சுற்றியுள்ள பகுதிகளில் விநியோகித்துள்ளனர். மேலும், இந்த சிறப்பு பூஜையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.
தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் பூஜை மற்றும் யாகங்கள் நடத்தியுள்ள அ.தி.மு.க தொண்டர்கள், தற்போது ஸ்டேட் விட்டு ஸ்டேட் சென்று பூஜை செய்ய ஆரம்பித்திருக்கின்றார்கள்.

No comments:

Post a Comment