Wednesday, 18 March 2015

கண் எரிச்சல் அதிகமாக இருக்கா?? இத ட்ரை பண்ணுங்க…


இப்போது நாம் வேலை பார்க்கும் சூழலில் அதிக நேரம் கணினி, செல்ஃபோன் போன்று கண்களை பாதிக்கும் தொழில்நுட்பங்களிலேயே அதிகமாக பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம்.
அப்படி தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது நமது கண் சிவப்பாக மாறி மிகவும் எரிச்சலாக இருக்கும். இதனால் நம்மால் தூங்க முடியாத நிலை கூட ஏற்படலாம். இதனை சரி செய்ய வேண்டும் என்றால் நாம் கணினியில் அதிக நேரம் செலவழிப்பதை தவர்க்க வேண்டும்.
ஆனால் அது முடியாத காரியம். ஆனால் அதில் இருந்து இரவு நிவாரணம் பெற என்ன வழி என்பதை காணலாம்.
கண்களில் சுத்தமான விளக்கெண்ணெய் சில துளிகள் விட்டால் கண் எரிச்சல், சோர்வு, வீக்கம் போன்றவை சரியாகும். மேலும், கண் பார்வை தெளிவாக இருக்கும்.
வெள்ளரிக்காய் பற்றி தெரிந்த ஒன்று தான். வெள்ளரிக்காயை நறுக்கி கண்களில் வைத்து வந்தால் கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும். மேலும், கண்களில் ஏற்படும் அரிப்பையும், எரிச்சலையும் போக்கும்.
உருளைக்கிழங்கை அரைத்து பேஸ்ட் செய்து கண்களில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவி வர கண் எரிச்சல் நீங்கும்.
கற்றாழை ஜெல்லினை பஞ்சில் நனைத்து கண்களின் மேல் வைத்தால், கண்களில் உள்ள அரிப்பு எரிச்சல் நீங்கி புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
ஐஸ் கட்டிகளை கண்கள் மீது வைத்தால் எரிச்சல் நீங்கும்.
குறிப்பாக வேலையில் இருக்கும் போது 10 நிமிடங்களுக்கு ஒரு முறை நீர் குடிப்பது மிகவும் நல்லது.

No comments:

Post a Comment