Wednesday, 18 March 2015

ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படம் ‘அகிரா’.. யார் யார் நடிக்கிறார்கள்..!


கத்தி படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு முருகதாஸ் எந்த படத்தை இயக்குகிறார், யாரை வைத்து இயக்குகிறார் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர் பார்த்து வந்தனர்.
சமீபத்தில் கூட அவர் ரஜினையை வைத்து ஒரு படம் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளிவந்தது. ஆனால் சத்தமில்லாமல் இந்தி படம் ஒன்றை இயக்கச் சென்றுவிட்டாராம் முருகதாஸ்.
ஏற்கனவே அவர் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹாவை வைத்து ஒரு படம் இயக்கவிருக்கிறேன் என்று சொன்னாலும் அதைப்பற்றி எந்த தகவலும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில்தான் சைலண்டாக சோனாக்‌ஷி நடிக்கும் படத்தை தொடங்கியிருக்கிறார் முருகதாஸ்.
சாந்தகுமார் இயக்கத்தில் அருள்நிதி நடித்து தமிழில் வெளிவந்த ‘மௌனகுரு’ படத்தையே தற்போது அவர் இந்தியில் சோனாக்ஷி சின்ஹாவுக்காக சில மாற்றங்களைச் செய்து ரீமேக் செய்யவிருப்பதாகக் கூறப்படுகிறது.
கஜினி, ஹாலிடே படங்களுக்குப் பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்த 3வது இந்தி படத்திற்கு ‘அகிரா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘அகிரா’ என்றால் சமஸ்கிருதத்தில் தெய்வீக வலிமை என்று அர்த்தமாம். ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

No comments:

Post a Comment