தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி பேராசியர்களுக்கு சம்பளம் தரப்படுவதில்லை என்று மாணவர் அமைப்பு ஒன்று சென்னை முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டி வருகிறது.
சென்னை அடுத்துள்ள மாமண்டூரில் அமைந்துள்ளது ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரி. விஜயகாந்துக்குச் சொந்தமான இந்த கல்லூரி அவர் நடிகராக இருந்த போதிலிருந்தே நடத்தப்பட்டு வருகிறது.
இந்த கல்லூரியில் யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறைப்படி பேராசிரியர்களுக்கு ஊதியம் தரப்படுவதி்ல்லை என்று புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி என்ற மாணவர் அமைப்பு புகார் தெரிவித்துள்ளது.
இந்த புகாரை போஸ்டராக அடித்து சென்னை சுற்று வட்டாரத்தில் அடித்து வருகிறது. மேலும், இந்த போஸ்டரில், விஜயகாந்த், கல்லூரி மாணவர்களிடம் கட்டணம் வாங்கித் தன் மகனைப் படிக்க வைக்கிறார் என்று குறிப்பிடப்பட்டு விஜயகாந்தை கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment