திரையுலகில் அறிமுகமாகும் ஹீரோயின்கள் எல்லாம் முதலில் சொல்லுவது எதுவென்றால் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன், நீச்சல் உடை அணியமாட்டேன், முத்தக் காட்சியில் நடிக்க மாட்டேன் என்பதுதான்.
ஆனால் அதெல்லாம் தமிழ் சினிமாவில் நடிக்கும் போது மட்டும்தான். தெலுங்கு, இந்தி என்றால் தாரளமாகக் கவர்ச்சி காட்டி எப்படி வேண்டுமானாலும் நடிக்கத் தயார் என்று ஒரு அறிக்கைவிடுவார்கள். ஆனால் சமீபக்காலமாக தமிழ் சினிமாவிலும் கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
முதல் படத்தில் நடிக்கும் போது குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் இவர்கள் இரண்டு மூன்று படங்களிலேயே கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்துவிடுகின்றனர். இதற்கு உதாரணமாக தமன்னா, சமந்தா, ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் என்று சொல்லிக்கொண்டே போகலாம். தற்போது அந்த லிஸ்டில் இணைந்திருப்பவர் மேகா பட நாயகி சிருஷ்டி.
மேகா படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சிருஷ்டி டாங்கே முதல் படத்திலேயே குடும்ப பாங்கான ரோலில் நடித்து அசத்தினார். அதற்கு அடுத்து நடித்த டார்லிங் படத்தில் ஒரு சில காட்சிகளே வந்தாலும் ரசிகர்களை கவர்ந்து செல்வார்.
ஆனால் சமீபத்தில் வந்த எனக்குள் ஒருவன் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடியிருந்த சிருஷ்டி, தற்போது உருவாகி வரும் “ஒரு நொடியில்“ என்ற படத்தில் ஓவர் கவர்ச்சியாக நடித்திருக்கிறாராம். அதுவும் சிருஷ்டியை பார்த்து, இவரா அவர் என்று கேட்கும் அளவுக்கு கவர்ச்சியாக நடித்துள்ளாராம்.
நல்லூர் சுரேஷ் வழங்க, ஆக்கார் பட நிறுவனம் சார்பாக கே.கோடீஸ்வரராவ் தயாரிக்கும் படம் “ஒரு நொடியில்“. ஹரார் படமாக உருவாகி வரும் இப்படத்தில், சிருஷ்டி டாங்கே, தபஸ்ரீ ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.
இந்தப்படத்திற்காக இதுவரை இல்லாத அளவிற்கு படு கவர்ச்சியாக நடித்துள்ளார் சுருஷ்டி. மிக குறைந்த ஆடையில், கடற்கரையில், உடைகள் எல்லாம் நனைந்தபடி படு கவர்ச்சியாக நடித்துள்ளார்.

No comments:
Post a Comment