Wednesday, 18 March 2015

டி.டி.ஆருக்கு பயந்து ரயில் கழிவறையில் பயணித்த 40 போலீஸ்காரர்கள்…!!


ரயில் பயணத்தில் டிக்கெட் எடுக்காத பயணிகள் கழிவறையில் அடைந்து செல்வதை சினிமாவில் நிறைய கேள்விப்பட்டிருப்போம். நேரிலும் சிலர் பார்த்திருப்போம், இன்னும் சிலர் அனுபவப்பட்டிருப்போம்.
பெரும்பாலும், காசு இல்லாதவர்களும் ஏழைகளுமே இப்படி பயணிப்பது வழக்கம். ஆனால், ஆக்ராவில் ஒரு ரயிலில் 40 போலீஸ்காரர்கள் டிக்கெட் எடுக்காமல் கழிவறைக்குள் அடைந்து வந்து சிக்கியுள்ளனர்.
ஆக்ராவில், வி.கே.சிங் என்ற அதிகாரி தலைமையில் எக்ஸ்பிரஸ் ரயில்களில் டிக்கெட் சோதனை நடைபெற்றது. இந்த டி.டி.ஆர். குழு மஹாகெளஷல் எக்ஸ்பிரஸ் மற்றும் சட்டிஸ்கர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் நடத்ததியது.
இந்த இரண்டு ரயில்களில் இருந்தும், 130 பேர் கள்ள ரயில் ஏறி வந்து சிக்கியுள்ளனர். இந்த கும்பலிடம் விசாரணை செய்த போது தான் இதில் 40 போலீஸ் கறுப்பாடுகளும் கக்கூஸில் அடைந்து பயணம் செய்தது தெரியவந்தது.
சட்டம் ஒழுங்கைக் காக்க வேண்டிய காவலர்களே இப்படி நடந்து கொண்டதைக் கண்டித்த ரயில்வே அதிகாரிகள், மற்றவர்களுக்கு விதிக்கும் அதே அபராதத் தொகையை இந்த போலீஸ்காரர்களுக்கும் விதித்தனராம். இந்த செய்தி உத்திர பிரதேசம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment