இப்போதெல்லாம் ஒரு படம் வெளிவருகிறது என்றால் அந்தப் படத்தில் நிச்சயமாக மது அருந்தும்படியோ அல்லது புகைபிடிக்கும்படியோ ஒரு காட்சியாவது இடம்பெறுகின்றது.
சரி படத்தில்தான் ஹீரோக்கள் அப்படியென்றால் இங்க சில பாலிவுட் ஹீரோயின்கள் தங்கள் நிஜவாழ்க்கையிலயே புகையை ஊதி ஊதித் தள்ளுகின்றனர். அப்படி புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள பாலிவுட் நடிகைகள் யார் யார் என்று பார்ப்போம்.
தமிழில் ஜெயம் ரவியுடன் ’தாம் தூம்’ படத்தில் நடித்த பாலிவுட் நடிகையான கங்கனா ரணாவத் படங்களில் புகைப்பிடிப்பதுடன் நிஜ வாழ்க்கையிலும் ஒரு நாளைக்கு பல சிகரெட்களை ஊதித் தள்ளுகிறாராம். மேலும் புகைப்பிடித்தலுக்கு எதிராக தடை விதிப்பதை அவர் எதிர்த்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல பாலிவுட்டில் ஒரு காலத்தில் கொடிகட்டிப் பறந்த முன்னணி நடிகையான ராணி முகர்ஜியும் புகைபிடிப்பதற்கு விது விலக்கல்ல...அவரால் புகைப்பிடிக்காமல் பொழுதை கழிக்கவே முடியாதாம். இதனால் அவருக்கும், அவரது குடும்பத்தாருக்குமிடையே பிரச்சனை எல்லாம் ஏற்பட்டது என்பது குறிப்பிடதக்கது.
நடிகை ஐஸ்வர்யா உலகி அழகி பட்டம் வென்றார் என்றால் இவர் பிரபஞ்ச அழகி பட்டம் பெற்ற முதல் இந்திய பெண் என்று கூறலாம். யார் என்று யோசிக்காதீங்க அவர்தான் நடிகை சுஷ்மிதா சென். இவராலும் சிகரெட் பிடிக்காமல் இருக்க முடியாதாம். இப்போது இந்தப் பழக்கதை விட்டுவிட முயற்சித்து வருவதாக கூறி வருகிறார்.
உலக நாயகன் கமலுடன் இந்தியன் படத்தில் நடித்த மனிஷா கொய்ராலாவும் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமை. இவர் சில வருடங்களுக்கு முன்புதான் புற்றுநோயை போராடி வென்றார். அவர் தனது திருமண தினத்தில் கூட மணப்பெண் கோலத்தில் சிகரெட் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment