Sunday, 22 March 2015

சிங்கப்பூரின் தந்தையும் முதல் பிரதமருமான லீ குவான் யூ மரணம்…!!


சிங்கப் பூரின் தந்தை லீ குவான் யூ தனது 91வது வயதில் இன்று அதிகாலை காலமானார். நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி லீ குவான் யூ மரணித்துள்ளார்.
ஒரு வார காலமாக சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த லீ குவான் யூ இறந்ததாக போலி செய்திகள் உலவிக் கொண்டிருந்தன. இதை சிங்கப்பூர் அரசு கடுமையாகக் கண்டித்தது.
இதனை அடுத்து இன்று அதிகாலை லீ குவான் யூ மரணமடைந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகின. சிங்கப்பூரின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகித்த லீ குவான் யூ, சிங்கப்பூரின் முதல் பிரதமராகப் பதவி வகித்தவர்.
தொடர்ந்து 31 ஆண்டுகளாக பிரதமராகப் சேவை செய்த இவரது மரணத்துக்கு, சிங்கப்பூரில் சுமார் 1 வாரம் வரையில் துக்கம் அனுசரிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றன.
லீ குவான் மறைவிற்கு ஐ.நா., பொதுச்செயலாளர் பான் கீ-மூன், அமெரிக்க அதிபர் ஒபாமா உள்ளிட்ட உலக அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment