கர்நாடக மாநிலம், பெங்களூருவில் வணிக வரித்துறை கூடுதல் கமிஷனராக பணியாற்றியவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.கே.ரவி.
பணியில் கண்ணும் கருத்துமாக இருந்த இவர், கோலார் மாவட்டத்தில் ஆட்சியராக இருந்தபோது மணல் கடத்தல், சாலைப் பணிகளில் முறைகேடு, புறம்போக்கு நில அபகரிப்பு, ஏரிகள் ஆக்கிரமிப்பு போன்ற பல முறைகேடுகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்த நேர்மையான அதிகாரி என்று கூறப்படுகிறது.
கடந்த மார்ச் 13ம் தேதி, ரவி தன் வீட்டில் திடீரென தூக்கில் தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் புகாரளித்தனர்.
மேலும், இது குறித்த விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என்றும் கோரி போராடினர். நேர்மையான அதிகாரி ஒருவர் இறந்தது தொடர்பில் போராட்டங்கள் நடந்தது, நாடுமுழுவதும் பெரும் பரபப்பை ஏற்படுத்தி இருந்தது.
இது குறித்து இது வரை மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளி வந்துள்ளன. முதல் கட்ட விசாரணையில், ஐ.ஏ.எஸ்., ரவிக்கும் அவருடன் பயின்றவரும், திருமணமானவருமான டி.சி.பி., டாக்ரட் ரோஹினி காட்டோச் என்பவருக்கும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.
ரவியின் தொலைபேசியில் இருந்த தகவல்களின் அடிப்படையில், இருவரும் அடிக்கடி தொலைபேசியில் மாறி மாறி பேசி வந்தது தெரியவந்தது. அதோடு, தற்கொலை செய்த தினத்தன்று மட்டும் 44 முறை, ரவி அந்தப் பெண் அதிகாரிக்கு 44 முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக ஐ.ஏ.எஸ்., அதிகாரி ரவி 16 விநாடிகள் பெண் அதிகாரியிடம் செல்பொனில் பேசியுள்ளார். இதனடிப்படையில், புலனாய்வுத் துறை அதிகாரிகள் பெண் அதிகாரி ரோஹினி காட்டோச் என்பவரை அழைத்து விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையின் போது அவர் தெரிவித்ததாவது: ”எங்கள் இருவருக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்தது. திருமண உறவை முறித்துக்கொள்ளும்படி ரவி என்னை தொந்தரவு செய்தார்.
ரவியால் நான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டேன், தொடர்ந்து அவர் என்னிடம் பலாத்காரத்திற்கு முயன்றதற்கு நான் உடன்படவில்லை” பெண் அதிகாரியின் இந்த தகவல்கள் ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் தற்கொலை வழக்கில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதே வேளை, பெண் அதிகாரி கூறிய தகவல்கள் உண்மையானவையா என்ற கோணத்திலும் புலனாய்வுத் துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

No comments:
Post a Comment