ஹாலிவுட் நடிகரான லயம் நீசன் (liam neeson), இன்னும் இரு வருடங்களின் பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்துக்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக கூறியுள்ளார்.
அயர்லாந்தைச் சேர்ந்த 62 வயதான லயம் நீசன், ஸ்டீவன் ஸ்பில்பேர்க்கின் ஷின்ட்லர்ஸ் லியஸ்ட், ஸ்டார் வோர்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். 3 பாகங்களாக வெளியான "டேக்கன்" போன்ற ஆக்ஷன் திரைப்படங்களிலும் அவர் நடித்தார்.
ஆனால், தனது உடல் ஒத்துழைத்தால் இன்னும் இரு வருடங்களுக்கு மட்டும் ஆக்ஷன் படங்களில் நடிக்க விரும்புவதாகவும் அதன் பின்னர் அதை நிறுத்த விரும்புவதாகவும் லயம் நீசன் தெரிவித்துள்ளார்.
ஆக்ஷன் வேடங்களில் வெற்றிகரமாக விளங்குவதால் ஏனைய வேடங்களுக்கான வாய்ப்புகளும் அதிகமாக வருவதாகவும் ஆனால், தன்னால் நீண்ட காலத்துக்கு ஆக்ஷன் வேடத்தில் நடிக்க முடியாது என்பதை தான் உணர்ந்துள்ளதாகவும் லயம் நீசன் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment