பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் மத்திய அமெரிக்காவில் வாழ்ந்த மாயன் இனத்தவர்கள் பல நூற்றுக்கணக்கான மைல் தொலைவிலிருந்து 6 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடைய சிறுவர்களை கடத்தி வந்து பலிகொடுத்தமைக்கான சான்றுகள் பெலிஸ் பகுதியிலுள்ள குகையொன்றில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
பெலிஸ் பிராந்தியத்தில் கயோ மாவட்டத்திலுள்ள மிட்ன நட்ரெரா குகையிலேயே இந்த எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேற்படி எச்சங்களில் பலி கொடுக்கப்பட்டதை வெளிப்படுத்தும் அதிர்ச்சி காய வடுக்கள் காணப்பட்டன.
(வீடியோ கீழே)
குகையில் காணப்பட்ட பல்லாயிரக்கணக்கான எலும்புக்கூட்டு எச்சங்கள் மத்தியில் பற்கள் பலவும் காணப்பட்டன. இரசாயன பகுப்பாய்வுக்கு அவற்றை உட்படுத்திய ஆய்வாளர்கள் அந்த எச்சங்கள் மேற்படி குகை பிராந்தியத்திற்கு உரியவை அல்ல என கண்டறிந்துள்ளனர்.
அந்தப் பற்கள் 6 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடைய சிறுவர்களுக்குரியவையாகும். மாயன் காலத்தில் வாழ்ந்தவர்கள் இறைவனின் ஆசியைப் பெறும் மூலம் உடல்களையும் இருதயங்களையும் இரத்தங்களையும் அர்ப்பணம் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
(வீடியோ கீழே)

No comments:
Post a Comment