பிரித்தானியாவிலிருந்து திருடப்பட்ட துடுப்புப் படகை பயன்படுத்தி ஆங்கிலக்கால்வாயை கடந்து பிரான்ஸுக்கு பயணிக்க முயன்ற இரு போலந்து நாட்டவர்கள் பிரித்தானிய போலிஸாரால் மீட்கப்பட்டுள்ளனார்.
சுமார் 20வயது மதிக்கத்தக்க மேற்படி இருவரும் கென்ட் பிராந்தியத்திலுள்ள போல் க்ஸ்டோன் எனும் இடத்திலிருந்து பிரான்ஸுக்கு துடுப்புப் படகை பயன்படுத்தி 21 மைல் தூர பயணத்தை மேற்கொண்டிருந்த வேளையிலேயே பிடிக்கப்பட்டுள்ளனர்.
தம்மிடம் பணம் இல்லை எனவும் பிரான்ஸுக்கு வேலை தேடி புறப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். அவர்கள் இரு வரிடமும் போலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

No comments:
Post a Comment