தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் என்று அனைவருக்கும் பிடித்த கதாநாயகியாக வளம் வருப்பவர் நடிகை நயன்தாரா. அதனால் தான் கோடிகளில் சம்பளம் வாங்கினாலும் கை நிறைய படங்களை வைத்திருக்கிறார்.
இவர் தமிழில் மட்டுமில்லாமல் மலையாளத்திலும் ’பாஸ்கர் தி ராஸ்கல்’ என்ற படத்தில் நடித்துவருகிறார். மலையாள இயக்குநர் சித்திக் இயக்கும் இப்படத்தில் மம்மூட்டி ஹீரோவாக நடிக்கிறார்.
தமிழ் சினிமாவில் கோடிகளில் சம்பளம் வாங்கும் நயன்தாரா இந்தப்படத்தில் இயக்குநர் சித்திக்கிற்காக லட்சங்களில் சம்பளத்தை குறைத்திருக்கிறாராம்.விரைவில் இந்தப்படம் ரிலீஸாக இருக்கிறது.
இது குறித்து சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் இயக்குநர் சித்திக் நயன்தாரா பற்றி சில தகவல்களை கூறியிருக்கிறார். நயன்தாராவின் மனதில் சினிமாவைத் தவிர வேறு எதுவும் இல்லை. அவர் மேடை நிகழ்ச்சிகள் மற்றும் கடை திறப்பு விழாக்களில் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவது இல்லை.
நயன்தாரா அர்ப்பணிப்புடன் வேலை செய்து வருகிறார். அது அவர் படப்பிடிப்பு தளத்தில் நடந்து கொள்வதில் இருந்தே தெரியும். ஹீரோயின் என்று பந்தா செய்ய மாட்டார். காலை 9 மணிக்கு காட்சி படமாக்கப்படுகிறது என்றால் 8.55 மணிக்கே தயாராக நிற்பார் நயன்தாரா. பல நடிகைகளுக்கு உடைமாற்ற தான் அதிக நேரம் ஆகும்.
ஆனால் நயன்தாராவோ கண் இமைக்கும் நேரத்தில் உடைமாற்றிவிட்டு வந்துவிடுவார். தன்னால் படப்பிடிப்பில் தாமதம் ஏற்படக் கூடாது என்பதில் கவனமாக இருப்பவர் நயன்தாரா. தன்னுடைய காட்சிகள் படமாக்கப்பட்டு முடிந்தாலும் அவர் கேரவனுக்குள் செல்லாமல் படப்பிடிப்பு தளத்திலேயே இருந்து ஷூட்டிங்கை பார்த்துக் கொண்டிருப்பார் என்று சித்திக் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment