லண்டனில் பிறந்து 49 நாட்களே ஆன குழந்தை ஒன்று ‘ஐ லவ் யூ’ சொல்லி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
லண்டனின் கில்பெர்ன் நகரில் வசித்து வரும் அலி சுஃபி என்பவருக்கு 7 வாரங்களுக்கு முன் அழகிய பெண் குழந்தை பிறந்தது.
அரியான சுஃபி என்று பெயரிடப்பட்டுள்ள தன் குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்த போது ’ஐ லவ் யூ’ என்று கூறியுள்ளார் அலி சுஃபி. அப்போது குழந்தையும் ஆச்சரியப்படத்தக்க வகையில் ’ஐ லவ் யூ’ என்று திரும்ப கூறியுள்ளது.
இதனை வீடியோ எடுத்து இணையத்திலும் விட்டுள்ளனர். தற்போது இந்த குழந்தைக்கு 12 வாரங்கள் ஆகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோ கீழே...

No comments:
Post a Comment