Thursday, 19 March 2015

அறிமுக நடிகைன்னா அப்படி செய்வீங்களா..? விசாகா சிங்


சந்தானத்தின் ’கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை விசாகா சிங்.
தற்போது வாலிப ராஜா படத்தில் நடித்து வரும் அவர் சமீபத்தில் நடித்த ஒரு பேட்டியில் புதுமுக நடிகைகள் என்றால் ஓசியில் நடிக்க வேண்டுமா..? எனறு கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது: தமிழ், தெலுங்கு என இரு மொழியிலுமே நடித்திருக்கிறேன். இப்படங்களுக்கு பிறகு 40 முதல் 50 படங்கள் வரை நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அதில் எந்த கதையுமே எனக்கு பிடிக்கவில்லை. ஒரு நடிகை பெரிய ஸ்டாராக இருக்கிறாரா, இல்லையா என்பதை பார்க்காமல் அவருக்கு குறிப்பிடத்தக்க ஒரு சம்பளம் தரப்பட வேண்டும்.
புது நடிகை என்றதும் அவரை ஓசியில் நடிக்க வைக்கலாம் என்று எண்ணுவது சரியல்ல. அறிமுக நடிகை என்றால் அவ்வாறு செய்யலாமா..? அவர்களும் உழைக்க தானே செய்கிறார்கள்.
பல சமயங்களில் இப்படித்தான் சில தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் அறிமுக நடிகைகளிடம் எதிர்பார்க்கிறார்கள். அவர்களின் மனநிலை மாற வேண்டும். இதனால்தான் நிறைய படங்களை நான் ஏற்க மறுத்திருக்கிறேன் என்று கூறினார் விசாகா சிங்.

No comments:

Post a Comment