Monday, 2 March 2015

மேற்கிந்திய தீவுகளையும் மொக்கை பண்ணிய மோக்கா…மோக்கா!!


உலகக் கோப்பை போட்டி தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மைதானங்களில் நடைபெற்று வருகின்றது.
இதன் விளம்பரத்திற்காக ஸ்டார் ஸ்போட்ஸ் நிறுவனம் மோக்கா மோக்கா என்ற விளம்பரம் ஒன்றையும் அறிமுகப்படுத்தியது. பாகிஸ்தான் இந்திய ஆட்டத்தின் போது ஆரம்பித்த இந்த விளம்பரம் இந்தியாவின் தொடர் வெற்றிகளைத் தாண்டி வரும் மார்ச் 6 தேதி மேற்கிந்திய அணியை எதிர்கொள்கின்றது. தற்போது இதற்கும் ஒரு புதிய விளம்பரத்தினை வெளியிட்டுள்ளது.
அதில் நான்கு யூஏஇ அணி ரசிகர்கள் கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதில் இந்தியா வெற்றிபெற கடுப்பாகின்றனர். தொடர்ந்து வெளியே அழைப்பு மணி அடிக்க கொரியர் பாய் மேற்கிந்திய அணியின் ஜெர்ஸியை டெலிவரி செய்து விட்டு செல்கின்றார்.
சிறிது நேரத்தில் திரும்ப வரும் அந்த டெலிவரி பாய், அவர்களிடம் அன்று ஹோலி என்பதை அறிவுறுத்தி அதையாவது கொண்டாடுங்கள் என்று கூறுகிறார்.
இதன் மூலம் ’மேற்கிந்திய அணியும் இந்தியாவை ஜெயிக்காது எனவே ஹோலியையாவது கொண்டாடுங்கள்’ என்று கூறுவது போல இந்த விளம்பரம் குறிக்கின்றது.
இந்த விளம்பரம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோ கீழே...

No comments:

Post a Comment