Monday, 2 March 2015

இந்த வார பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்..?


சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியான ’காக்கி சட்டை’ படத்திற்கு சுமாரான ஓபனீங் கிடைத்துள்ளதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றன. குறிப்பாக சென்னையை விட திருச்சி, கோயம்பத்தூர், சேலம் மாவட்டங்களில் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
முதல் நாளில் சுமார் 4 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக கூறப்படும் காக்கி சட்டை படம் தற்போது மூன்று நாள் முடிவில் 12 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது உண்மையான வசூல் நிலவரமா என்று தெரியவில்லை. ஆனால் இந்த வார சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் மட்டும் தற்போது வெளிவந்துள்ளது.
கடந்த வாரம் வெளிவந்த காக்கிசட்டை 3 நாட்களில் ரூ 1.51 கோடியும், அனேகன் படம் மூன்று வார முடிவில் ரூ 3.98 கோடியும் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்திருக்கிறது. அதேபோல் 4 வார முடிவில் என்னை அறிந்தால் 5.92 கோடியும், ஐ படம் 7 வார முடிவில் 9.63 கோடியும், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் 2 வார முடிவில் 52 லட்சமும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment