2008ம் ஆண்டு உல்கையே உலுக்கிய மும்பை தாஜ் நட்சத்திர ஓட்டல் தாக்குதலில் முக்கிய பங்கு கொண்ட தீவிரவாதி லக்வி, பாகிஸ்தான் சிறையில் ராஜ வாழ்கை வாழ்ந்து வருவது தற்போது தெரியவந்துள்ளது.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஸாகி-உர்-ரெஹ்மான்-லக்வி இந்தியாவில் தேடப்படும் குற்றவாளி. இவர், பாகிஸ்தான் படையினரால், கடந்த 2008ம் ஆண்டு டிசம்பர் 7ம் நாள் கைது செய்யப்பட்டார்.
இவர் தற்போது பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் அமைந்துள்ள அட்யாலா சிறையில், வைக்கப்பட்டுள்ளார். பெயரளவில் சிறை என்றாலும் லக்வி அனைத்து வசதிகளுடன் உள்ளே ராஜ வாழ்கை வாழ்ந்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன் படி, ஜெயிலரின் அலுவலகத்துக்கு அருகிலேயே, லக்வி மற்றும் அவரது 6 தோழர்களின் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஜெயிலரின் உத்தரவின் பேரில், இவருக்கு தொலைகாட்சிப், மொபைல் போன், இண்டெர்நெட் என அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.
அதோடு, இவரை பார்ப்பதற்கு தினமும் பத்து பதினைந்து பார்வையாளர்களும் வந்து செல்கின்றனராம். அங்கிருந்த ஜெயில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
”இரவோ, பகலோ, லக்வியைப் பார்க்க வாரத்தின் ஏழு நாட்களிலும், எத்தனை பார்வையாளர்கள் வேண்டுமானாலும் வரலாம். அவர்கள் யாரிடமும் அனுமதி வாங்க வேண்டும் என்று அவசியமில்லை” என்று குறிப்பிட்டார்.
மேலும், பார்வையாளர்கள் யார் என்பதை ஜெயில் அதிகாரிகளுக்கு நிரூபிக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று கூறியுள்ளனர் அதிகாரிகள். பாகிஸ்தான் தம் நாட்டு பாதுகாப்பிற்காக இந்த வசதிகளை தீவிரவாதித் தலைவருக்கு வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

No comments:
Post a Comment