’என்னை அறிந்தால்’ படத்திற்கு பிறகு இயக்குநர் கெளதம் மேனன் சிம்புவை வைத்து ஒரு புதிய படம் இயக்கிவருகிறார். பொதுவாக பாடல்களின் வரிகளில் இருந்து தன்னுடைய படத்துக்கு தலைப்புகளை தேர்வு செய்து வழக்கமாக வைத்திருக்கும்கௌதம் மேனன் இந்தப் படத்திற்கும் எம்.ஜி.ஆர். நடித்த படத்தில் இடம்பெற்ற பாடல் வரியை தலைப்பாக வைத்திருக்கிறார்.
விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு பிறகு கௌதம் மேனனும், சிம்புவும் இணைந்துள்ள இந்தப் படத்திற்கு ’அச்சம் என்பது மடைமையடா’ என்று தலைப்பு வைத்துள்ளார். சமீபத்தில் இதை கௌதம் மேனனே அறிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், அச்சம் என்பது மடைமையடா என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதால் அதை ஆக்ஷன் படம் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
உண்மையில்... அச்சம் என்பது மடைமையடா 100% லவ் சப்பெஜக்ட். மருந்துக்குக் கூட படத்தில் ஆக்ஷன் கிடையாது. அது மட்டுமல்ல... விண்ணைத்தாண்டி வருவாயா படத்தைப் போல் காதலியைத் தேடி சிம்பு ஊர் ஊராக அலைவதுதான் கதை. இந்த படத்திற்கு ஏற்கெனவே பல்வேறு தலைப்புகள் பரிசீலனையில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment