வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. அறிமுகமான குறுகிய காலத்திலேயே தமிழ் சினிமாவில் ஒரு நிரந்தர இடைத்தை பிடித்துவிட்டார்.
இவருடைய வருகையால் அமலாபால், லட்சுமி மேனன், பிந்துமாதவி உள்ளிட்ட சில நடிகைகளின் மார்க்கெட் வீழ்ச்சி கண்டிருக்கிறது. அதோடு இரண்டாம் தட்டு ஹீரோக்களின் பேவரைட் நாயகி லிஸ்டில் இப்போது ஸ்ரீதிவ்யாதான் முன்னணியில் இருக்கிறார். அதன் காரணமாக தான் தற்போது அரை டஜன் படங்களில் நடித்துவருகிறார்.
சமீபத்தில் இவருடைய பெயரில் ஆபாசமான செல்ஃபி ஒன்று இணையத்தில் உலா வந்தது. இது குறித்து அப்போது அவர் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை, சிலர் இதை உண்மை என்றும், ஒரு சிலர் மார்ஃபிங் என்றும் கூறி வந்தனர். இந்நிலையில் தற்போது இது குறித்து முதல் முதலாக மனம் திறந்துள்ளார் ஸ்ரீ திவ்யா.
இதில் ‘அதையெல்லாம் நான் கேர் பண்ணவே இல்லை. பப்ளிசிட்டி இருக்கிற நடிகைகளைத்தானே இந்த மாதிரி ‘மார்ஃபிங்' செஞ்சு விளையாடுவாங்க. ஆனா, இதனால அவங்களுக்கு என்ன கிடைக்கப் போகுதுனுதான் தெரியலை.
இவ்ளோ கஷ்டப்பட்டு மார்ஃபிங் பண்ற நேரத்தை நல்லது பண்றதுக்காக செலவழிச்சிருக்கலாம். அதை விட்டுட்டு இந்த வேலையை மெனக்கெட்டு செஞ்சிருக்காங்க. சரி, விடுங்க... விடுங்க... அவங்களுக்கு ஒரு அற்ப சந்தோஷம் என ஆவசேமாக கூறியுள்ளார்.

No comments:
Post a Comment