அமெரிக்காவைச் சேர்ந்த தொலைக்காட்சி நட்சத்திரம் ஒருவரின் ஆடம்பர வீடு சுமார் 4000 சுருள் கழிவறை பேப்பர்களால் (toilet paper) மூடப்பட்ட சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
நகைச்சுவை நடிகரும் அறிவிப்பாளருமான ஹோவி மெண்டெலின் (Howie Mandel) வீட்டில் நகைச்சுவைக் கலைஞரான ரோமன் அட்வூட் என்பவர் வேடிக்கைக்காக இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
இது குறித்து ஹோவி மெண்டலின் மனைவி மற்றும் மகனுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், வெளியூருக்கு சுற்றுலாவுக்கு சென்ருந்த ஹோவி மெண்டெல், வீடு திரும்பியபோது தனது வீடு முற்றிலும் கழிவறை பேப்பர் சுருள்களினால் மூடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
ஹோவி மெண்டலின் பிரதிபலிப்பை காண்பிப்பதற்காக கெமராக்களையும் ரோமன் அட்வூட் பொருத்தியிருந்தார். ஆனால், ஹோவி மெண்டல் இதிலுள்ள வேடிக்கையை இரசிக்கவில்லை. "இது வேடிக்கை என நினைக்கிறீரா?, கேட் போடப்பட்ட குடியிருப்பு பகுதிக்குள் நீ எப்படி வந்தாய்?'' என கோபமாக கேள்வி எழுப்பினார் அவர்.

No comments:
Post a Comment